Friday, January 17
Shadow

அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்: ரஜினிகாந்த் பேச்சு

ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது நாளாக சந்தித்து வருகிறார். ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது:-

இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய், தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான்.

ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

என்று கூறினார்.

Leave a Reply