Tuesday, November 17
Shadow

“பிரபலங்களுடன் அல்ல… நல்ல மனிதர்களுடன் பணியாற்றுவதையே விரும்புகிறேன்” – ‘அன்பில் அவன்’ இசையமைப்பாளர் கோவில் வசந்தா

“பிரபலங்களுடன் அல்ல… நல்ல மனிதர்களுடன் பணியாற்றுவதையே விரும்புகிறேன்” – ‘அன்பில் அவன்’ இசையமைப்பாளர் கோவில் வசந்தா

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கோவில் வசந்தா பேசியதாவது:
“வணக்கம். ‘அன்பில் அவன்’ திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியமான படம். இது எனது முதல் முயற்சி என்பதால், இந்தப் படைப்பின் மீது எனக்கு தனிப்பட்ட எதிர்பார்ப்பும், பொறுப்பும் இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக படம் எப்படி வந்திருக்கிறது என்பதை நீங்கள் திரையரங்கில் பார்த்து முடிவு செய்யுங்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தப் படம் மிகவும் உண்மையான முயற்சியாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அசோக் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது. இதுவரை நான் பணியாற்றிய தயாரிப்பாளர்களில் அவர் மிகவும் சிறப்பானவர் என்று சொல்லலாம். அதற்கு காரணம் பணம் மட்டுமல்ல. இந்தப் படத்தை அவர் ஒரு திரைப்படமாக மட்டும் பார்க்காமல், தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
படத்தின் கிளைமாக்ஸ் பாடல் தொடர்பாக ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. அந்தப் பாடலுக்காக கோவையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அசோக் நேரடியாக என்னை சந்திக்க வந்தார். கிளைமாக்ஸ் பாடலில் இன்னும் வேறொரு முயற்சியைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வளவு தூரம் வந்திருந்தார். அந்த விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், படைப்பின் மீது அக்கறை கொண்ட ஒரு மனிதராக அவர் செயல்பட்டதை அப்போது உணர்ந்தேன்.
திரைத்துறையில் பெரிய பிரபலங்களுடன் பணியாற்றுவது மட்டுமே முக்கியம் என்று நான் நினைப்பதில்லை. நல்ல மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவதுதான் எனக்கு முக்கியம். அந்த வகையில் ‘அன்பில் அவன்’ எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.
நான் பொதுவாக அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்றுவதில் அதிக ஆர்வம் கொண்டவன். என்னுடைய இசைப் பயணத்தில் பெரும்பாலான படங்கள் முதல் முறையாக இயக்குநர் பொறுப்பேற்றவர்களின் படங்களாகவே இருந்திருக்கின்றன. புதிய இயக்குநர்களின் நோக்கத்தில் இருக்கும் நேர்மையும், அவர்களுடைய படைப்பைச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த நேர்மையை இந்தப் படத்திலும் நான் உணர்ந்தேன்.
இந்தப் படத்தில் பல திறமையான பாடகர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பாடலின் வெற்றியில் பாடகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று நான் எப்போதும் நம்புகிறேன். அதேபோல், சிறந்த இசைக்கலைஞர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம்.
பாபிநாஷ், ஹரி, ராஜன், சுஜித், லட்சுமி, சந்தீப் உள்ளிட்ட பல இசைக் கலைஞர்களும், பேஸ் கிட்டார் கலைஞர் நவீன் உள்ளிட்ட திறமையாளர்களும் இந்தப் படத்தின் இசையில் பணியாற்றியுள்ளனர். அனைவரின் உழைப்பும் சேர்ந்து பாடல்களுக்கு நல்ல தரத்தை உருவாக்கியுள்ளது.
‘அன்பில் அவன்’ படத்தின் இசையில் நான் செய்துள்ள பணியின் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. ரசிகர்கள் திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது அந்த உழைப்பை உணர்வார்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் இசையமைப்பாளர் கோவில் வசந்தா.

“I Prefer Working with Good Human Beings Rather Than Celebrities” – Composer Kovil Vasantha on Anbil Avan

Speaking at an event for the upcoming film Anbil Avan, music composer Kovil Vasantha shared his thoughts on the film, his experience working with the team, and the importance of genuine collaboration.

“This film is very special to me. As this is my maiden attempt, I have a personal connection and responsibility towards the project. I would like the audience to watch the film and decide for themselves how it has shaped up technically. But one thing I can say with certainty is that Anbil Avan is a very genuine effort in every aspect.

Working with producer Ashok has been a wonderful experience. He is undoubtedly one of the finest producers I have worked with. It is not just about the financial aspects. What impressed me most was the way he personally connected with the film and its creative process.

There is a song in the climax, and while we were working on it, Ashok personally came to meet me in Cochin because he wanted to explore another possibility for the climax song. He did not have to travel all the way just for that. That showed me how much importance he gives to the creative process.

For me, it is important to work with good human beings rather than simply working with celebrities. Anbil Avan has given me that experience, and I have thoroughly enjoyed being part of the film.

I also have a special interest in working with first-time directors. Almost 99 per cent of my discography consists of films helmed by first-time directors. I believe their intentions are pure, and I really appreciate that quality. I found the same sincerity in this project as well.

I had the opportunity to work with several talented singers for this film. I strongly believe that singers are an integral part of any song. We have also brought together several talented musicians and technicians for the project, including Babinash, Hari, Rajan, Sujith, Lakshmi, Sandeep and bassist Naveen.

A large number of talented musicians have contributed to the film, and I am very confident about the quality of the work we have created. I am extremely happy to be a part of Anbil Avan and grateful to everyone who has supported the project,” said composer Kovil Vasantha.