சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சம் என்று தான் சொல்லணும் குறைந்த காலத்தில் எந்த நடிகரும் இந்த அளவுக்கு உச்சத்துக்கு போனது இல்லை என்று சொல்லணும் பணம் மட்டும் இல்லை புகழ் ரசிகர்பட்டாளம் வசூல் சக்கரவர்த்தி இப்படி பல வெற்றியை கண்டவர் என்றால் அது சிவகார்த்திகேயனுக்கு பொருந்தும். இப்ப இவரின் வெற்றி தமிழில் இருந்து தெலுங்குக்கு போகிறது ரெமோ திரைப்படம் தமிழில் பல சாதனைகள் புரிந்தது இதை தொடர்ந்து தெலுங்கிலும் வெற்றி கொடிகட்ட போகிறார் .
நேற்று மாலை ரெமோ இசை வெளியீடு தெலுங்கில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய சமந்தா என் வாழ்க்கையில் ஒரு ஸ்டார், சூப்பர் ஸ்டாராக உருவாவதைப் பார்த்ததில்லை, ஆனால் இப்பொழுது பார்க்கிறேன்… வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்” என புகழ்ந்திருப்பவர் சமந்தா. ரெமோ படத்தின் தெலுங்கு இசைவெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட சமந்தா, சிவகார்த்திகேயனைப் புகழ்ந்து தள்ள, பதிலுக்கு “ரெமோ தெலுங்கு இசையை வெளியிட்டதற்கும், உங்களின் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி” என்று ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார் சிவா. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.