
- அஜித் தற்போது தனது 57-வது படமாக ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் மறுபக்கம், இப்படத்தின் பாடல்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
- இந்நிலையில், அஜித்தக்காக ஒரு பாடல் பாடவேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என்று ஒரு பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல, தனுஷ்தான். சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தனுஷ் இவ்வாறு கூறியுள்ளார். அந்த ஆசை கூடிய விரைவில் நிறைவேறும் என்றும் தான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
- அஜித்தின் புதிய படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், அறிமுகப்படுத்தியதே தனுஷ்தான். அதனால், தனுஷின் இந்த ஆசை இந்த படத்தின் மூலமாகவே நிறைவேறிவிடும் என்று தெரிகிறது. அது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்