Friday, March 29
Shadow

என்னை தொந்தரவு செய்தால்நீதிமன்றத்திற்கு போவேன் சிவகார்த்திகேயன்!

சென்னை, அக்.18 (டி.என்.எஸ்) ‘ரெமோ’ படத்திற்குப் பிறகு மோகன் ராஜா படத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குவதாகவும் சிவகார்த்திகேயன் அதிகாரப்பூவமாக அறிவித்தாலும், அப்படத்தை தொடங்க விட மாட்டோம் என்று சில தயாரிப்பாளர்கள் மல்லுக்கட்டுகிறார்கள்.

சிவாவின் மேடை கண்ணீருக்கு காரணமான அந்த தயாரிப்பாளர்கள் மூன்று பேரும், சிவா தங்களுக்கு கால்ஷீட் கொடுத்து அதற்கான அட்வான்ஸையும் பெற்றிருக்கிறார், என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்க, சிவாவோ, அட்வாஸ் எதையும் நான் வாங்கவில்லை, என்று மறுப்பு தெரிவிப்பதுடன், நடிகர் சங்கத்திலும் புகார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவரான பி.எல்.தேனப்பன், வேந்தர் மூவிஸ் மதன், எஸ்கேப் ஆர்டிஸ் மதன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகிய மூன்று பேருக்கும் சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டிருப்பதாக புகார் வந்துள்ளதாகவும், புகார் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை மறுத்துள்ள சிவகார்த்திகேயன், தனது விளக்கத்தை நடிகர் சங்கத்திற்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நடிகர் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், “என்னிடம் கால்ஷீட் கேட்டு 2013-ல் தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் ஆகிய 3 பேர் அணுகினார்கள். இதில் ஞானவேல்ராஜா படத்தில் நடிப்பதற்கு மட்டும் ஒப்பந்தம் போடப்பட்டது. மற்ற இருவரின் படங்களில் நடிக்க வாய்மொழியாகவே பேசப்பட்டது. இதற்காக அவர்களிடம் சம்பளத்துக்கான முன்பணம் எதுவும் நான் வாங்கவில்லை.

இப்போது எனது மார்க்கெட் நிலவரம் உயர்ந்துள்ள நிலையில் அவர்கள் மூன்று பேரும் வந்து தங்கள் படங்களில் நடித்துக் கொடுக்கும்படி வற்புறுத்துகிறார்கள். ஞானவேல்ராஜாவிடம் ஒப்பந்தம் போட்டு இருப்பதால் அவர் படத்தில் நடித்துக் கொடுப்பேன். ஆனால் மற்ற இருவரின் படங்களிலும் நடிக்க முடியாது. அவர்களிடம் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த கடிதத்தை நடிகர் சங்கர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் நீதிமன்றத்திற்கு செல்வதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம்.

Leave a Reply