Wednesday, April 30
Shadow

“இமைக்கா நொடிகள்” படத்தில் பிரபுதேவா நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் இன்று அனைவராலும் எதிர்பார்க்கும் நடிகை என்றால் அது நயன்தாரா காரணம் அவரின் சமீபத்தில் வந்த படங்கள் என்று தான் சொல்லணும். அதிலும் குறிப்பாக தற்போது அனைவராலும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது இமைக்கா நொடிகள் காரணம் இந்த படத்தின் டிசர் என்று தான் சொல்லணும் இந்த எதிர்பார்ப்புக்கு இந்த டிசர் வெளியானதிலிருந்து மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு ஏனென்றால் இந்த படத்தில் நயன்தாரா லுக் முதல் ஸ்டைல் வரை முழுவதும் இந்த படத்தின் இயக்குனர் மாற்றியுள்ளார் என்று தான் சொல்லணும் குறிப்பாக இவர் டீசரில் துப்பாக்கி சுடும் காட்சிகள் வருவதை பார்த்து நிறைய பேர் மீண்டும் ஒரு விஜயசாந்தி போல இருக்கிறார் என்று பேச ஆரம்பித்துள்ளனர். நமக்கும் அப்படி தான் இருந்தது. யோதை இயக்குனரிடம் கேட்டபோது.

இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இவர் ஏற்கனவே டிமாண்டி காலனி என்ற மிக பெரிய வெற்றி படத்தை கொடுத்தவர் தான் இந்த படத்தின் இயக்குனர். இவரிடம் அவரின் இமைக்கா நொடிகள் படத்தை பற்றி கேட்டபோது அவர் கூறிய சில விஷயங்கள் பார்ப்போம்

இந்த படத்தின் கதை எழுதும் போது இது ஹீரோக்கான கதையாக தான் எழுதினேன் முதலின் இந்த படத்தை பிரபுதேவாவை மனதில் வைத்து எழுதினேன். ஆனால் முழு கதை எழுதி முடித்தவுடன் இந்த கதையை ஹீரோயின் கதையாக மாற்றி நயன்தாரா என்று ஆரம்பித்தோம். அதே போல இந்த படத்தின் வில்லனாக முதலில் இயக்குனர் கௌதம் மேனன் என்று தான் மனதி வைத்து எழுதினேன் ஆனால் அவரால் நடிக்க இயலவில்லை காரணம் அவரின் படங்களுக்கு நேரம் இல்லாததால் தான் வேறு வில்லன் என்று முடிவு எடுத்தேன் அந்த நேரம் என் குரு நாதர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘அகிரா’ படத்தின் டிசர் வெளியானது அதில் பார்த்த வில்லன் தான் அனுராக் காஷ்யாப் அந்த டிசர் பார்த்தவுடன் இவர் தான் வில்லன் என்று முடிவு எடுத்து அவரிடம் பொய் கதை சொன்னேன் அவருக்கும் கதையும் அவரின் கதாபாத்திரமும் பிடித்துபோக உடனே சம்மதம் கூறினார். அப்போதே இந்த படத்தின் பலம் மேலும் அதிகமானது.

இந்த படத்தின் பலம் நயன்தாரா காரணம் அவர் முதல் முறையாக சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார் ஒரு தொடர் கொலையை மையமாக வைத்து அமைக்கப்பட்ட படம் தான் இந்த இமைக்கா நொடிகள் நயன்தாரா நீங்கள் நினைப்பது போல சண்டை எல்லாம் போடவில்லை மிகவும் ஸ்டைல் ஆன ஒரு அதிகாரியாக வருகிறார் அவருக்கு தம்பியாக அதரவா நடிக்கிறார் இவர்கள் பந்தத்திலும் ஒரு சின்ன விஷயம் இருக்கு அதர்வா இந்த படத்தில் டாக்டராக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

அதே போல இந்த படத்தின் இன்னொரு பலம் என்றால் அது இந்த படத்தின் வில்லன் அனுராக் காஷ்யாப் என்று தான் சொல்லணும் அவர் வரும் ஒவ்வரு காட்சியும் ரசிகர்கள் திரையரங்கத்தில் ஒரு வித புது வித அனுபவம் கிடிக்கும் அந்த அளவுக்கு மிக வித்தியாசமாக நடித்துள்ளார் என்று தான் சொல்லணும்.

‘‘வெவ்வேறு களங்கள்ல நடக்கும் இரண்டு கதைகள் ஒண்ணு சேரும் புள்ளிதான் க்ளைமாக்ஸ்ங்கிறது, ஒரு க்ரைம் நாவல் உணர்வை தருது. தவிர பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியிருக்கார். எப்படி இருக்கு இந்த அனுபவம் என்று கேட்டால் நிச்சயம் இதுவரை நீங்கள் தமிழில் பார்க்காத கிரைம் திரில்லர் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்கிறார் இயக்குனர்

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் மேலும் பலமாக நடிகர் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிடங்கள் வருகிறார் அந்த பதினைந்து நிமிடங்கள் நிச்சயம் ஒரு புதுவித அனுபவம் கிடைக்கும் படத்துக்கு மேலும் பலம் சேர்கிறார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி அதே போல படதிதின் ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர் வசனம் பட்டுகோட்டை பிரபாகர் இந்த படத்தை அதிக பொருள் செலவில் கேமியோ பிலம்ஸ் சார்பாக ஜெயகுமார் தயாரிக்கிறார் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வெளிவர திட்டம் போட்டு வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

Leave a Reply