Wednesday, January 21
Shadow

யுவன் சங்கர் ராஜா குரலில், ஜஸ்டின் பிரபாகர் இசையில், வெளியிட்ட சிறை படத்தின் இரண்டாவது சிங்கிள் “மின்னு வட்டம் பூச்சி” பாடல் வெளியானது

இசை ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சியாக, யுவன் சங்கர் ராஜாவின் குரலில், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான “சிறை” படத்தின் இரண்டாவது பாடல் “மின்னு வட்டம் பூச்சி” இன்று வெளியானது.

இந்த பாடல் வெளியீடு வழக்கமான மேடை நிகழ்ச்சியாக இல்லாமல், சென்னை VIT கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் மிகவும் உற்சாகமாக நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கைத்தட்டல், ஆரவாரத்துக்கு நடுவே இந்த மெலடி பாடல் முதன்முறையாக ஒலித்தது.

விக்ரம் பிரபு மற்றும் LK அக்ஷய் குமார் நடித்துள்ள “சிறை” திரைப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஒரு மாறுபட்ட கதையுடன் தயாராகி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தை, இயக்குநர் வெற்றிமாறனிடம் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான “சிறை” டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், தற்போது வந்துள்ள “மின்னு வட்டம் பூச்சி” பாடல் அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

யுவன் சங்கர் ராஜாவின் குரல், காதில் விழுந்த முதல் நொடியிலிருந்தே மனதை இழுத்துக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மென்மையான மெலடியாக உருவான இந்த பாடலுக்கு, கார்த்திக் நேத்தா அர்த்தமுள்ள வரிகளை எழுதியுள்ளார். யுவனுடன் சேர்ந்து பத்மஜா ஸ்ரீனிவாசன் பாடியிருப்பதும் பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக அனந்தா நடித்துள்ளார். தயாரிப்பாளர் SS லலித் குமாரின் மகன் LK அக்ஷய் குமார் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு – மாதேஷ் மாணிக்கம்
எடிட்டிங் – பிலோமின் ராஜ்
ஸ்டண்ட் – பிரபு
நிர்வாக தயாரிப்பு – அருண் K & மணிகண்டன்

“சிறை” படத்தின் சேட்டிலைட் மற்றும் OTT உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வரும் டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, “சிறை” திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கான விளம்பர பயணத்தை படக்குழு தற்போது தமிழகமெங்கும் உற்சாகமாக மேற்கொண்டு வருகிறது.

🎵 “மின்னு வட்டம் பூச்சி” பாடல் வீடியோ:
👉