
தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை இந்திய சினிமாவிலே தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்றால் அது மணிரத்தினம் என்று தான் சொல்லணும். தமிழ் சினிமாவில் தலை சிறந்த ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் வைத்து இயக்கிய பெருமை மட்டும் இல்லாமல் அந்த இருவரின் கேரியரில் மிக சிறந்த படங்களாக அமைந்த படங்களும் ஆகும் கமலுக்கு ஒரு நாயகன் என்றால் ரஜினிக்கு ஒரு தளபதி என்று தான் சொல்லணும் இந்த இரண்டு படங்களும் கேங்க்ஸ்டர் படம் என்ற பெருமையும் உண்டு. தற்போது மணிரத்தினம் அவர்கள் இயக்கி வரும் படம் காற்று இடைவெளி படம் படபிடிப்பு முடிந்து மற்றவேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. இதற்க்கு நடுவில் மணிரத்தினம் அவர்கள் தளபதி பார்ட் 2 இயக்க திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் கசிந்துள்ளது ,
இந்த தளபதி பார்ட் 2 வில் விஜய் மற்றும் விக்ரம் நடிக்க இருபதாக தகவல்கள் வெளியாகிகொண்டுருகிறது இது உண்மையா என்று விசாரித்ததில் உண்மை தான் இருவரிடமும் கதை சொல்லி இருவருக்கும் பிடித்துவிட்டது என்றம் சொல்லபடுகிறது அது மட்டும் இல்லாமல் ரஜினி நடித்த சூர்யா பாத்திரத்தில் விஜய்யும் மம்முட்டி நடித்த தேவா பாத்திரத்தில் விக்ரம் நடிக்க போகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த இருவரிடமும் கதை கூறி சம்மதமும் வாங்கிவிட்டாராம் . அட்லி படபிடிப்பு முடிந்தவுடன் இந்த படம் ஆரம்பிக்கும் என்றும் சொல்லபடுகிறது அது மட்டும் இல்லை இந்த படம் முடிந்தவுடன் தான் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கபோறாராம். இந்த படத்தின் அறிவிப்பு வரும் விஜய் பிறந்த நாளில் அறிவிக்க போகிறார்களாம். அப்பா விஜய் ரசிகர்களுக்கு இரண்டு ட்ரீட் .