Friday, December 4
Shadow

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படகுழுவினரின் மகிழ்ச்சி தொடருமா


பிக்பாஸ் வேலைகளுக்கு நடுவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் படத்தின் புகைப்படப் படப்பிடிப்பு நடந்தது.

இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்குமா? என்கிற கேள்வி எழுந்தது.

இப்போது பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

டிசம்பரில் தொடங்கவிருக்கும் படப்பிடிப்புக்காக கமல் 28 நாட்கள் ஒதுக்கியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அதற்குப்பின் தேவைப்பட்டால் சில நாட்கள் ஒதுக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.இந்தியன் 2 படப்பிடிப்பு சம்பந்தமாகப் ப்லவேறு கருத்து வேறுபாடுகள் நிலவியதால் விக்ரம் படத்துக்குத் தேதிகள் கொடுத்திருந்தார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அது மாறியிருப்பதால் இந்தியன் 2 படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

CLOSE
CLOSE