ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.
நேற்று முன் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியான அதிகளவில் பாசிட்டிவ்வாகவும் குறைந்த அளவில் நெகட்டிவ் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் முதல் இரண்டு நாளில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.12 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. விடுமுறை தினம் இல்லாமல் வெளியானதை மனதில்வைத்து பார்த்தால் இது பெரிய வசூலே ஆகும்.