சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் சென்னை வசூல் குறித்து நாம் அறிந்ததே. வெளியான மூன்றே வாரத்தில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்த படத்தை சென்னையில் ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனம் வெளியிட்டு நல்ல லாபத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘கபாலி’யை அடுத்து சீயான் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்தை சென்னையில் வெளியிட முடிவு செய்த ஜாஸ் சினிமாஸ்’ தற்போது சென்னை ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ‘கபாலி’யை அடுத்து ‘இருமுகனும்’ சென்னையில் வசூலில் சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த படத்தை ஷிபுதமீன்ஸ் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.