ஒரு காலத்தில் குறைந்த அரங்கத்தில் தான் படம் ரிலீஸ் ஆகும் அப்படி ரிலீஸ் ஆகி படங்கள் நூறு நாள் என்று போஸ்டர் அடிப்பார்கள் அடுத்து வெள்ளி விழாவை நோக்கி என்று எல்லாம் பார்ப்போம் அனால் இப்ப அப்படியே மாறிவிட்டது குறைந்த நாளில் எவ்வளவு வசூல் என்பதுதான் வடத்தின் வெற்றியை குறிக்கிறது அந்த வகையில் விக்ரம் இருமுகன் வசூலில் சாதனை புரிந்துள்ளது
விக்ரம் நடிப்பில் கடந்த 8 ஆம் தேதி வெளியான ‘இருமுகன்’ படம் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 425 திரையரங்குகளில் வெளியான இப்படம் 4 நாட்களிலேயே ரூ. 50 கோடி வசூல் செய்து ஆச்சரியத்தை கொடுத்தது.
கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் இருமுகனுக்கு போட்டியாக வேறு எந்த படங்களும் இல்லை என்பதால் திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. இதனால் இரண்டே வாரங்களில் ரூ. 100 கோடி வசூல் செய்ததாக இருமுகன் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தெரிவித்தார்.
தற்போது படத்தின் வசூல் ரூ. 100 கோடியை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த மூன்றாவது படம் ‘இருமுகன்’ தான். இதற்கு முன்னதாக விஜய்யின் ‘தெறி’ படமும், ரஜினியின் கபாலி படமும் 100 கோடி லிஸ்ட்டில் இடம் பிடித்திருந்தன். தற்போது அந்த லிஸ்டில் விக்ரமின் ‘இருமுகன்’ படமும் இணைந்துள்ளது.