Sunday, October 6
Shadow

சிம்பு எனக்கு எதிரியா? தனுஷ் விளக்கம்

தமிழ் சினிமாவில் கோஷ்டி சண்டை என்பது இப்ப இல்லை அந்த காலத்தில் இருந்தே இருக்கு அதின் உச்சகட்டம் அஜித் விஜய் அடுத்து சிம்பு தனுஷ் இவர்கள் ரசிகர்கள் போடும் சண்டை அம்மாடி தாங்க முடியாது அந்த அளவுக்கு இருக்கும்

சமூக வலைதளங்களில் சிம்புவின் ரசிகர்களும் தனுஷின் ரசிகர்களும் மோதிக் கொள்வதை அதிக அளவில் தினமும் பார்த்து வருகிறோம். ஆனால் நாங்கள் என்றுமே எதிரிகள் அல்ல என்று தனுஷ் கூறியுள்ளார்.

சமீபத்தில் தனுஷ் அளித்த பேட்டியில் சிம்புவை பற்றிய சில உண்மைகளை கூறியுள்ளார். அதில், ‘நானும் சிம்புவும் எப்போதுமே நண்பர்கள் தான். நான் அவரை எதிரியாக ஒரு நாளும் எண்ணியதில்லை. கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணையுங்கள் அப்போது தான் ஒரு புது அனுபவம் கிடைக்கும் என்று சிம்பு தான் என்னிடம் கூறினார்.

நிச்சயமாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் உங்களை ஒரு தனி ஸ்டைலில் தான் காண்பிப்பார் கெளதம் என்று நான் அவரிடம் கூறினேன். ஒவ்வொரு படத்தினை பற்றியும் பல சுவாரிஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்’ என்று கூறினார்.

Leave a Reply