Saturday, February 15
Shadow

காதலை வைத்து விளம்பரம் தேடும் ஜெய் மற்றும் அஞ்சலி

கடந்த இரண்டு நாளுக்கு முன் வெளியான பலூன் டீசர் வெளியான நேரத்தில் இருந்து மிகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது யு டுப்யில் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கு காரணம் அஞ்சலி ஜெய் காதலர்கள் இந்த இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள் அதுனால இதில் அவர்கள் காதல் சமந்தமான காட்சிகள் வரும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு பார்கிறார்கள் என்று செய்தி வரவி வருகிறது இது உண்மையா இல்லை அஞ்சலி ஜெய்யை வைத்து விளம்பரம் தேடுகிறார்களா என்றும் ஒரு பக்கம் என்று தோன்றுகிறது அதை முக்கிய விஷயம் இருவரின் திருமணத்தை வைத்தும் விளம்பரம் தேடுகிறார்கள் என்றும் கூறபடுகிறது

ஜெய் – அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக பல வருடங்களாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இருவருமே அதைப்பற்றி வாய்திறக்காமல் இருக்கின்றனர். பொதுவாக, தான் நடிக்கும் எந்தப் படத்தின் புரமோஷனிலும் கலந்துகொள்ள மாட்டார் ஜெய். எனவே, இதைப்பற்றி அவரிடம் கேட்கவே முடிவதில்லை. அஞ்சலியிடம் கேட்டால், “திருமணத்துக்கு என்ன அவசரம்? நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும்” என்று சமாளித்து விடுவார். கடந்த சில வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூறப்படும் அஞ்சலி – ஜெய் இருவரும், வருகிற டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகத் தகவல் பரவி வருகிறது. திருப்பதி கோயிலில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் எக்ஸ்ட்ரா தகவலைச் சொல்கின்றனர்.

ஆனால், இந்தத் தகவல் உண்மைதானா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம், ஒரு படத்தில் நடித்த நடிகர் – நடிகைக்கு இடையே கனெக்‌ஷன் இருப்பதாகக் கூறி படத்துக்கு இலவச விளம்பரம் தேடிக் கொள்வது கோடம்பாக்கத்தில் வழக்கம். ‘பலூன்’ படத்தில் ஜெய் – அஞ்சலி இணைந்து நடித்திருப்பதால், அந்தப் படத்துக்கு பப்ளிசிட்டி தேட இதுபோல் வதந்தியைக் கிளப்பியிருக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Latest Post

Leave a Reply