Wednesday, February 1
Shadow

‘ஜெயம்’ ரவி, நயன்தாரா நடிப்பில், I. அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’ படத்தின் டைட்டில் & முதல் பார்வை வெளியீடு*

 

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & G. ஜெயராம் வழங்கும் ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா நடிப்பில், I. அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’ படத்தின் டைட்டில் & முதல் பார்வை வெளியீடு*

பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் & ஜி. ஜெயராம் ஆகியோர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் பாராட்டத்தக்க பொழுதுபோக்கு படங்களை உருவாக்கியுள்ளனர். நம்பிக்கைகுரிய நிறைய படங்கள் தயாரித்து இருந்தாலும் இந்த வருடம் 2023-லும் வித்தியாசமான கதைக்களங்களை கைவசம் வைத்திருக்கின்றனர். அதில், I. அஹமது இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி- நயன்தாரா நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் ‘இறைவன்’ திரைப்படமும் ஒன்று. இதன் டைட்டில் மற்றும் முதல் பார்வையை ஹேண்ட்ஸம் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

படம் குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பேசியதாவது, “‘இறைவன்’ படத்தின் டைட்டில் & முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ‘இறைவன்’ படம் உருவான மொத்த புராசஸும் சுவாரஸ்யமானது. ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா போன்ற நட்சத்திரங்களுடன் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை இயக்குநர் அஹமத் உருவாக்கி இருக்கிறார். அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்தது தயாரிப்பாளராக பேஷன் ஸ்டுடியோஸிற்கு மகிழ்ச்சியான விஷயம். எங்கள் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி சார் அவர்களுக்கு நன்றி. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதிகளை விரைவில் அறிவிப்போம்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “இயக்குநர் அஹமதுவின் முந்தைய படங்களான ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’, ‘ஜனகனமன’ ஆகிய படங்களைப் போலவே ‘இறைவன்’ திரைப்படமும் தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இது இருந்தாலும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய சினிமா பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். ‘ஜெயம்’ ரவி சார், நயன்தாரா மேம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர்களது ஸ்டார் வேல்யூ மற்றும் கடந்த 2022-ல் வெளியாகி வெற்றிப் பெற்ற அவர்களது படங்களும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘இறைவன்’ படம் எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நிச்சயம் ஒரு மைல்கல்லாக அமையும் என நம்புகிறேன்”.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் வில்லன் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, சார்லி, அழகம் பெருமாள், வினோத் கிஷன், பக்ஸ், படவா கோபி, பொற்கொடி இன்னும் பல முக்கிய கதாபாத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்*:

ஒளிப்பதிவு : ஹரி கே வேதாந்த்,
இசை : யுவன் ஷங்கர் ராஜா,
படத்தொகுப்பு : மணிகண்ட பாலாஜி,
கலை இயக்குநர் : ஜாக்கி,
சண்டை பயிற்சி : டான் அசோக்.

 

Sudhan Sundaram & G. Jayaram of Passion Studios have churned out commendable entertainers that have appealed to the interests of audiences from all walks of life. While the producers have already produced a promising league of movies, they have lined up more projects in 2023 scheduled at different stages of production. One among them is Jayam Ravi-Nayanthara starrer ‘Iraivan’, an action thriller, directed by I.Ahmed. The handsome and most proficient actor Karthi has unveiled the Title and First Look of this film.

Producer Sundan Sundaram, Passion Studios, says, “We are happy to present the title and first look of our prestigious film ‘Iraivan’. The entire process of materializing ‘Iraivan’ has been impressive. Director Ahmed’s adroitness in crafting a unique story with a gripping screenplay and executing this project with big names like Jayam Ravi sir, Nayanthara madam, and others is tremendous. We at Passion Studios are pleased to see him wrapping up the entire project on time as planned. I thank Karthi sir for his kind gesture of launching the title and first look of our film. We will soon announce the trailer, audio, and worldwide theatrical release dates of the film.”

Director I.Ahmed’s previous films Vamanan, Endrendrum Punnagai, and Manithan belong to different genres and own unique story premises. Significantly, ‘Iraivan’ is an action thriller that will be an entertaining and riveting film that will impress the universal crowds. I thank Jayam Ravi sir, Nayanthara madam, and everyone on the team for their support. Having these proficient actors, whose star values have escalated to a greater degree in 2022 with their respective magnum opus hits, will add more value to our film. I am sure that Iraivan will be a special milestone for the entire team and passion studios.”

The star cast includes Jayam Ravi, Lady Superstar Nayanthara, ‘Vishwaroopam’ fame Rahul Bose, Ashish Vidyarthi, Naren, Vijayalakshmi, Charlie, Azhagam Perumal, Vinoth Kishan, Bucks, Badava Gopi, Porkodi and many more prominent actors.

Yuvan Shankar Raja is composing the music, and Hari K. Vedanth is handling the cinematography for Iraivan. Manikanda Balaji (Editor), Jacki (Art Director), and Don Ashok (Stunts) are the others in the technical crew.