Tuesday, December 7
Shadow

ஜீவாவின் சீறு படத்தின் ட்ரைலர் இணையதளங்களில் சீறுகிறது


கொஞ்சம் ஆக்டிவாவே இருக்கும் நடிகர் ஜீவாவுக்கு கொரில்லா’ படத்திற்கு பிறகும் கூட ‘ஜிப்ஸி, சீறு, களத்தில் சந்திப்போம், 83’ என அடுத்தடுத்து படங்கள் கைவசம் இருக்குது. இதில் ‘சீறு’ படத்தை பிரபல இயக்குநர் ரத்ன சிவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். மேலும், வருண், சதீஷ் முக்கிய வேடங்களில் நடிச்சிருக்காங்க.

டி.இமான் இசையமைத்துள்ள இதற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ என்ற நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிச்சிருக்கார். சமீபத்தில்,வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ட்ரெய்லரை வருகிற ஜனவரி 24-ஆம் தேதியும், படத்தை பிப்ரவரி 7-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதை தயாரிப்பு நிறுவனமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ள நிலையில் இன்னிக்கு இப்போ அப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகி இருக்குது அந்த ட்ரெய்லர் இதோ :

CLOSE
CLOSE