Saturday, October 12
Shadow

ஜோதிகாவின் அடுத்த திரைப்படம் “ மகளிர்மட்டும் “கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா !!

“ மகளிர்மட்டும் “ என்ற டைட்டில்லில் கமல் ஹாசன் ராஜ்கமல் தயாரிப்பில் வெளிவந்த படம் இந்த படத்தில் கமல்ஹாசன் ஊர்வசி ரேவதி ரோகினி நாசர் நாகேஷ் மற்றும் பலர் நடித்து மிக பெரிய வெற்றி படம் மகளிர் மட்டும் இந்த படத்தின் டைட்டில் ஜோதிகாவின் அடுத்த திரைப்படத்துக்கு “ மகளிர்மட்டும் “என்ற வைக்கப்பட்டுள்ளது இந்த டைட்டில் கொடுத்ததுக்கு செவாலியே கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா !!

36 வயதினிலே படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் திரைப்படம் “மகளிர் மட்டும் “ . தேசிய விருது பெற்ற “ குற்றம் கடிதல் “ படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரம்மா இயக்கும் இப்படத்தில் நடிகை ஊர்வசி , பானு ப்ரியா , மற்றும் சரண்யா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டேயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பு க்ரிஸ் பிக்சர்ஸ். ஜோதிகா இப்படத்தில் ஆவன பட இயக்குநராக நடிக்கிறார். நாசர் மற்றும் லிவிங்ஸ்டன் நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது.

Leave a Reply