சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா, ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது ரீஎண்ட்ரி ஆனார். அந்தபடம் நல்ல வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து மகளிர் மட்டும் படத்திலும் நடித்தார். தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடிக்கிறார்.
இந்நிலையில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகிய ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் படத்தின் கதையாகும். வித்யா பாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும், இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் பிரித்விராஜ், ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த `மொழி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி ஜோதிகாவிடம் கேட்டபோது, படத்தயாரிப்பாளர்கள் இதுதொடர்பாக தன்னை அணுகினார்கள். இன்னும் ஒப்பந்தம் முடிவாகவில்லை. வித்யாபாலன் நடித்துள்ள அந்த இந்திப் படத்தை நான் பார்த்தேன். மிக நன்றாக இருக்கிறது. இப்போதைக்கு ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் மார்ச் மாதத்தில் முடிவடைகிறது. அதன்பிறகு மே அல்லது ஜூன் மாதத்தில் ‘தும்ஹரி சுளு’ படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.