
‘கன்னடத்து பைங்கிளி’ படத்தில் பாக்யராஜின் கடைசி காட்சி வெளியீடு – படக்குழுவின் நெகிழ்ச்சியான அஞ்சலி!
பாக்யராஜ் – டி. ராஜேந்தர் இணைந்த முதல் படம் | 35 ஆண்டுகளுக்குப் பிறகு பூர்ணிமா பாக்யராஜுடன் இணைந்து நடித்த கடைசி திரைப்படம்
நடிகர், இயக்குநர் என தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய கே. பாக்யராஜ் நடித்துள்ள கடைசி திரைப்படமாக ‘கன்னடத்து பைங்கிளி’ அமைந்துள்ளது. சாய் ரமணி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை எம்.பி.எம். எண்டர்டெயின்மென்ட் (MBM Entertainment) சார்பில் இந்துமதி கோபி தயாரித்து வருகிறார்.
பாக்யராஜின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘கன்னடத்து பைங்கிளி’ படக்குழு, அவர் நடித்த கடைசி காட்சியை வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பில் அவர் பங்கேற்ற காட்சிகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்திருந்த நிலையில், ரசிகர்களை சந்திக்கவும், படத்தை தீவிரமாக புரொமோட் செய்யவும் அவர் விரும்பியதாக இயக்குநர் சாய் ரமணி தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக பாக்யராஜ் மற்றும் இசையமைப்பாளர் டி. ராஜேந்தர் முதல் முறையாக இணைந்து பணியாற்றியிருப்பது அமைந்துள்ளது. இப்படத்திற்கான பாடல்களை டி. ராஜேந்தர் எழுதி, இசையமைத்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் சாய் ரமணி கூறுகையில், “பாக்யராஜ் சாரின் திடீர் மறைவு எங்கள் படக்குழுவை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பின் இறுதி நாளில் பாக்யராஜ் சார் மற்றும் டி. ராஜேந்தர் சாரை வைத்து முதல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், அந்த நாளில் பாக்யராஜ் சாருக்கு இரங்கல் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது மிகவும் துயரமான அனுபவமாக இருந்தது.
‘கன்னடத்து பைங்கிளி’ படத்தில் பாக்யராஜ் சார் தனது காட்சிகள் அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். அவருக்கான இன்னும் சில க்ளோஸ்-அப் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியிருந்தது. அந்தக் காட்சிகளை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்க இருக்கிறோம்.
சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜ் சாரும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் இதுவாகும். அதிலும் இருவரும் கணவன்–மனைவியாகவே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்யராஜ் சாரின் நினைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர் நடித்த கடைசி காட்சியை வெளியிட்டுள்ளோம். காதல், நகைச்சுவை கலந்த இந்தப் படத்தில் நாயகனின் தந்தையாக முக்கியமான கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பாக்யராஜ் சார் இடம்பெறுகிறார்” என்றார்.
‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்தில் புதுமுகங்களான அமல் அஜித் மற்றும் ஆதியா ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக், இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பேராண்மை’, ‘மீகாமன்’, ‘வாகா’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ். ஆர். சதீஷ் குமார், ‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாடு–கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சாய் ரமணி தெரிவித்துள்ளார்.
பாக்யராஜின் திரைப்பயணத்தில் நினைவாக இடம்பெறவிருக்கும் ‘கன்னடத்து பைங்கிளி’, அவரது ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான திரைப்பட அனுபவமாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

‘Kannadathu Paingili’ Team Releases K. Bhagyaraj’s Last Scene as a Heartfelt Tribute
K. Bhagyaraj and T. Rajendar Come Together for the First Time | Film Marks Bhagyaraj’s Final Appearance and His Reunion with Poornima Bhagyaraj After 35 Years
Actor-filmmaker K. Bhagyaraj’s final film appearance will be in Kannadathu Paingili, directed by Sai Ramani and produced by Indhumathi Gopi under the banner of MBM Entertainment.
Following Bhagyaraj’s untimely demise, the team of Kannadathu Paingili has released the last scene featuring the veteran actor as a heartfelt tribute to his memory.
Bhagyaraj had completed almost all of his portions for the film. Only a few close-up shots were pending at the time of his demise, and the filmmakers have revealed that they plan to complete those portions with the help of AI technology.
Adding to the film’s significance, Kannadathu Paingili marks the first time that K. Bhagyaraj and T. Rajendar have worked together. Rajendar has penned the lyrics and composed the music for the film.
Speaking about the emotional circumstances surrounding the film, director Sai Ramani said, “Bhagyaraj sir’s sudden demise has left all of us deeply shocked and saddened. On the final day of the shoot, we had planned to conduct the film’s first press meet with Bhagyaraj sir and T. Rajendar sir. Unfortunately, we had to hold a condolence tribute for Bhagyaraj sir instead. It was an extremely painful moment for all of us.”
“Bhagyaraj sir completed all his portions for Kannadathu Paingili wonderfully. He was also keen that we promote the film extensively. Only a few close-up shots remained when he passed away. We are planning to recreate those scenes with the help of AI technology,” he added.
The film also marks a special reunion between K. Bhagyaraj and his wife, actress Poornima Bhagyaraj. After nearly 35 years, the couple has appeared together on screen again, and they play husband and wife in the film.
“As a tribute to Bhagyaraj sir, we have released the last scene he performed for Kannadathu Paingili. The film is a blend of romance and comedy, with Bhagyaraj sir playing the protagonist’s father in an important role that appears throughout the film,” Sai Ramani said.
The film features newcomers Amal Ajith and Aadhya in the lead roles. Singam Puli, Pugazh, Aadhavan and Lollu Sabha Jeeva are among the actors playing important roles.
Popular YouTubers Koomapatti Thangapandi, Autokkaran Deepak and Idiappam Siva, along with two other YouTube personalities, are also making their acting debuts with the film.
Several artistes from Karnataka are also part of the cast.
S. R. Sathish Kumar, who has worked as the cinematographer on films including Peranmai, Mugamariyan and Vaaga, has handled the cinematography for Kannadathu Paingili.
According to director Sai Ramani, the story is inspired by a real incident that took place in Hosur, located along the Tamil Nadu–Karnataka border, during the 1990s.
With K. Bhagyaraj’s final screen appearance, his first collaboration with T. Rajendar and his reunion with Poornima Bhagyaraj after nearly three decades, Kannadathu Paingili carries a special significance for Tamil cinema audiences.
