ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதம் வெளியானது.
முதலில் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும் பின்னர் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தியது. மேலும் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் கபாலி முதன்மை இடத்தில் உள்ளது. தீபாவளியன்று இப்படம் திரையரங்குகளில் தனது வெற்றிகரமான 100-வது நாளையும் எட்டியது.
இந்நிலையில் கபாலி படத்தில் உள்ள 52 தவறுகளை சுட்டிக்காட்டி ஒரு வீடியோ மலையாளத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.