Wednesday, April 30
Shadow

கடவுள் இருக்கான் குமாரு சக்கை போடு போடும் பர்ஸ்ட் லுக்

எனக்கு இன்னொரு பேரு இருக்கு படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார் கடவுள் இருக்கான் குமாரு, புருஸ்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் கடவுள் இருக்கான் குமாரு படத்தை ராஜேஷ்.எம் இயக்கியுள்ளார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். தனது முந்தைய படங்களைப்போன்று இந்த படத்திலும் அதிரடியான பாடல்களை கொடுத்துள்ளார் அவர்.

மேலும், நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் அழகான பொண்ணு கொளுக்கட்டையோட ஐ லவ் யூ சொன்னா, கடவுள் இருக்கான் குமாரு -என்ற வாசகத்தோடு பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதற்கு ஏராளமான இளவட்ட ரசிகர்கள் லைக் கொடுத்து வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

Leave a Reply