Sunday, October 13
Shadow

400 திரையரங்களில் வெளியாகும் கடவுள் இருக்கான் குமாரு

கடவுள் இருக்கான் குமாரு பல சோதனைகளை தாண்டி இந்த வாரம் வெளியாகிறது என்பதை தயாரிப்பாளர் T. சிவா கூறினார் .

கடவுள் இருக்கான் குமாரு வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் 18ஆம் தேதி வெளியாக முக்கிய காரணம் இப்போது மக்கள் சந்தித்து வரும் பண பிரச்சனை தான். எல்லோரும் எங்களிடம் படத்தை வருகிற வெள்ளிகிழமை வெளியிடுமாறு கேட்டு கொண்டனர்.

கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் வருகிற வெளியாகும் போது மக்கள் அதை மகிழ்சியுடன் பார்த்து ரசிக்க எதுவாக இருக்கும். கடவுள் இருக்கான் குமாரு மக்கள் அனைவரும் சிரித்து ரசித்து பார்க்கும் வகையில் காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். இப்படம் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகுகிறது. இது பெரிய நடிகர்களுக்கு நிகரான ஒரு வெளியீடாகும். ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து ஒரு திரைப்படம் 400 திரையரங்குக்கு மேல் வெளியாவது இதுவே முதன் முறை என்றார் இயக்குநர் ராஜேஷ்.

Leave a Reply