Saturday, February 15
Shadow

நாட்டுக்கு உதவும் விதத்தில் நடந்து கொள்ள நடிகை காஜல் அகர்வால் கோரிக்கை

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் வியாபாரிகளுக்கு உதவுங்கள் என்று பிரபல நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா விவகாரத்தில் நாட்டுக்கு உதவும் விதத்தில் நாம் நடந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் பாதிப்பு முடிவடைந்த பிறகு,விடுமுறையை இந்தியாவில் கழியுங்கள் என்றும்  உள்ளூர் ஹோட்டல்களில் சாப்பிடுங்கள் என்றும் நடிகர் காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

உள்ளூரில் விளையும், விற்கப்படும் பழங்கள், காய்கறிகளை வாங்க வேண்டும் என்றும்,  இந்திய நிறுவனங்களின் துணிகளையும் பொருட்களையும் வாங்கி  உள்ளூர் வியாபாரிகளுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வணிக நிறுவனங்களால் நம்முடைய உதவியில்லாமல் மீண்டும் சகஜ நிலைமைக்குத் திரும்பமுடியாது என்றும் காஜல் அகர்வால் கூறியுள்ளார்.