மிஷ்கினின் நந்தலாலா படத்தில் அறிமுகமாகி மெட்ராஸ் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கலையரசன்.
தனது அசாதாரணமான திறமையால் குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் கபாலியில் நடித்த இவர், தமிழ் குமரன் எனும் கதாபாத்திரத்தில் அதில் அழுத்தமான முத்திரையை பதித்திருப்பார்.
கபாலியை தொடர்ந்து தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் எய்தவன். மதயானைக்கூட்டம் படத்தில் விக்ரம் சுகுமாரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ள இப்படத்தை Friends Festivel Films நிறுவனம் சார்பாக சுதாகரன் தயாரித்துள்ளார். பிச்சைக்காரன் நாயகி சாட்னா டைடஸ் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும் சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பசங்க போன்ற தரமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இந்த படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் பார்க்கும் ஆவலையும் ரசிகர்களிடம் கடத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் டிரைலரும் விரைவில் வெளியாகவுள்ளது.