
உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு மட்டும் இல்லை இந்திய சினிமாவின் பெருமை என்று தான் சொல்லணும் இந்திய சினிமா பெருமை உலகெங்கும் எடுத்து சென்ற ஒரு சிலரில் முக்கிய பங்குவகிப்பது நம் உலக நாயகன் என்று சொன்னால் மிகையாகது இந்த உலக நாயகுனுக்கு வரும் நவம்பர் 7ம் தேதி பிறந்த நாள் வருகிறது.
இந்த பிறந்த நாளை நாடு முழுதும் வெகுவிமர்சியாக கொண்டாட திட்டம் போட்டு இருக்கும் கமல் ரசிகர்கள் பல வித எண்ணங்களுடனும் பல வித தொண்டுகளும் செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் நம் தஞ்சை மாவட்ட ரசிகர்களும் திட்டம் போட்டுள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது இதற்கு நமது பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏழை எளிய மக்களுக்கு பலவித உதவிகளை செய்யவேண்டும் என்று பப்ளிக் ஸ்டார் கூறினார்.
அதோடு கமல்ஹாசன் நமது சொத்து நம் நாட்டின் மிக சிறந்த தலைவர்களில் ஒருவராக திகழபோகிறார் என்றும் பேசினார் உலக நாயகன் விழாவில் கலந்துகொள்வதும் அவரை பற்றி பேசவும் நான் கொடுத்துவைத்து இருக்கவேண்டும் என்றும் கூறினார் அதோடு கமல் சார் செய்யும் எல்லாவித நன்மைகளோடு நானும் தோளோடு தோளாக இருப்பேன் என்றும் கூறினார் . உலக நாயகன் பிறந்த நாளில் வருடம் வருடம் ரத்ததான முகாம் நடத்துவது எனபது சிறந்த விஷயம் காரணம் இந்த ரத்ததான முகாமால் பல உயிர்கள் காபத்தபடுகிறது பெருமையான விஷயம் என்றும் கூறினார்