
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பு, ஸ்டைலுக்கென்று தனி ரசிகர்பட்டாளமே இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர், நடிகைகளுக்கு முன்மாதிரியாகவும், உத்வேகம் அளிப்பராகவும் இருக்கிறார். அஜித் நடிக்கும் புதிய படம் ரிலீசானால் போதும் தமிழ்நாடே திருவிழா போல காட்சி அளிக்கும்.
அஜித் ரசிகர் மன்றம் வைக்காவிட்டாலும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தென் இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகிறார்கள். நடிகைகளிலும் ஏராளமானோர் இவருடைய ரசிகைகளாகவே இருக்கிறார்கள். அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இளம் நடிகைகள் வலம் வருகிறார்கள். இது பற்றிய தகவல்களையும், விருப்பங்களையும் வெளிப்படையாகவே தெரிவித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அந்த வகையில் கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹர்ஷிகா பூனாச்சாவும் அஜித்துடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பிரபல கன்னட ஹீரோ புனித் ராஜ்குமாருடன் ‘ஜாக்கி’ படத்தில் நடித்த இவர் தற்போது, பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹர்ஷிகா பூனாச்சா அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘அஜித் பெயரிலேயே பவர் இருக்கிறது. அவருடைய ரசிகையாக இருப்பதே எனது பலம். அஜித்துடன் நடிப்பது எனது வாழ்நாள் கனவு. அதற்காக நான் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.