த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜணை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’.
தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலக்ஷ்மி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்ஷா நடிக்கவிருக்கிறார்கள். ஆரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். சிட்டி பாபு ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார்.
சென்னையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது.
கன்னித்தீவு என்பது மக்களிடையே மிகவும் பிரபலமான காமிக்ஸ் தொடராகும். இதில் வரும் நாயகனின் பெயர் சிந்துபாத். ஏற்கனவே சிந்துபாத் என்ற பெயரில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கன்னித்தீவு என்ற பெயரில் புதிய படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது
இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்ஷா நடிக்கவிருக்கிறார்கள்.
ஆரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.
சிட்டி பாபு ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார்.