
“கார்த்திக் சுப்புராஜின் சிந்தனை எனது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது!” – ‘டோரதி’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா
‘டோரதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சௌந்தரராஜா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவினருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
கார்த்திக் சுப்புராஜ் குறித்து பேசிய சௌந்தரராஜா, “கார்த்திக் சுப்புராஜை 2008ஆம் ஆண்டு முதலே எனக்குத் தெரியும். அவரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு சரியான மேடை அமையவில்லை. ‘டோரதி’ படத்தின் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கார்த்திக் உருவாக்கும் திரைப்படங்களில் படம் வெளியாகும் வரை அதன் கதையையோ, முக்கியமான விஷயங்களையோ வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார். படம் பார்த்த பிறகும் சில நாட்கள் அந்த அனுபவம் ரசிகர்களிடம் புதிதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருப்பார். அவரது சிந்தனையும் படைப்பாற்றலும் வழக்கமான எல்லைகளைத் தாண்டியதாக இருக்கும்.
அவருடன் பழகியதன் மூலம் சினிமாவைத் தாண்டி வாழ்க்கையிலும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அவரது எண்ணம், செயல்பாடு, ஒழுக்கம் என அனைத்திலும் ஒரு தெளிவு இருக்கும்.
கார்த்திக் தனது சொந்த ஊரையும் அங்குள்ள மக்களையும் மிகவும் நேசிப்பவர். வெளிநாடுகளில் பணியாற்றியிருந்தாலும், எத்தனை திரைப்படங்களை இயக்கியிருந்தாலும், அவருக்குள் இருக்கும் தமிழ் உணர்வு எப்போதும் வெளிப்படும். அவரது திரைப்படங்களில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒரு ஆழமான உணர்வும், வலியும் இருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
கார்த்திக் சுப்புராஜ் தமிழ்நாடு, இந்தியா என்ற எல்லைகளைக் கடந்து உலக அளவில் மிகப்பெரிய திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது எனது விருப்பம். அவருடைய வளர்ச்சிக்காக நான் பலமுறை வேண்டியிருக்கிறேன். இந்த நிலையில் அவருடைய பெற்றோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
‘டோரதி’ திரைப்படத்தில் நடித்த வாய்ப்பு குறித்து சௌந்தரராஜா கூறுகையில், “கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு படத்தையும் தொடங்கும்போதும் அவரிடம் வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருப்பேன். ‘எனக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள், செய்வோம்’ என்று கூறுவேன். அவர் சொல்வதை நான் எப்போதும் மறுப்பதில்லை.
‘ஜிகர்தண்டா’, ‘ஜகமே தந்திரம்’ போன்ற படங்களில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். இன்றும் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் என்னை ஒரு நடிகராக பலர் அடையாளம் கண்டு பாராட்டுகிறார்கள் என்றால், அதற்கு ‘ஜிகர்தண்டா’ முக்கியமான காரணங்களில் ஒன்று.
‘டோரதி’ படத்திற்கான வாய்ப்பு கிடைத்தபோது சில தனிப்பட்ட காரணங்களால் சிக்கல்கள் இருந்தாலும், அனைத்தையும் சமாளித்து படத்தில் நடித்தேன். இன்று அந்த முடிவை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தப் படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் ஒரு நிறைவு இல்லாமல் இருந்திருக்கும்.
படத்தைப் பார்த்த பலரும் எனது நடிப்பைப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக தொழில்நுட்பக் கலைஞர்களிடமிருந்தும் பாராட்டுகள் கிடைத்தன. அதற்கான பெருமை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படத்தின் இளம் படைப்பாளிகளான சனந்த், ரிஷி ஆகியோரையும் சேரும்” என்றார்.
சனந்த் மற்றும் ரிஷி குறித்து பேசிய அவர், “இருவரும் நீண்ட காலமாக சினிமாவில் கடினமாக உழைத்து வருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே சினிமாவை மிகவும் தொழில்முறை அணுகுமுறையுடன் பார்த்து வருகின்றனர். தங்களுடைய திறமையை எந்த தளத்தில் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர்களுக்கு தெளிவு இருக்கிறது. அவர்கள் இருவரும் தொடர்ந்து வளர வேண்டும். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷுடன் பணியாற்றிய அனுபவத்தையும் சௌந்தரராஜா பகிர்ந்து கொண்டார்.
“கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்ற மிகப்பெரிய நடிகை. அவருடன் பணியாற்றும்போது ஆரம்பத்தில் எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் படப்பிடிப்பில் அவரை பார்த்தபோது அவரது எளிமையும் பணிவும் என்னை மிகவும் கவர்ந்தது.
இவ்வளவு உயரத்தில் இருக்கும் ஒரு நடிகை இவ்வளவு எளிமையாக இருப்பதை நான் பார்த்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இயக்குநர் என்ன சொன்னாலும் எந்த தயக்கமும் இல்லாமல் அதை ஏற்று நடிப்பது அவருடைய மிகப்பெரிய சிறப்பு. அவரிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அவரது இந்த குணத்திற்காகவே அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன்.
மதுரை பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றபோது மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். கேரவன் செல்ல முடியாத இடங்களில்கூட சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். நேரத்திற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவமும், பணியின் மீதான அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது. அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு தொடர்ந்து பல வெற்றிகள் கிடைக்க வேண்டும்” என்றார்.
ஒளிப்பதிவாளர் திரு குறித்தும் சௌந்தரராஜா பேசினார். “திரு சார் குறித்து கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது ஒளிப்பதிவில் கேமரா முன்பு நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு இயக்குநரின் படைப்பாற்றலை திரையில் கொண்டு வருவதில் ஒளிப்பதிவாளரின் பங்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில் திரு சாருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது” என்று கூறினார்.
‘டோரதி’ திரைப்படம் தொடர்பான தனது அனுபவங்களை சௌந்தரராஜா இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

“Karthik Subbaraj’s Way of Thinking Has Changed My Perspective on Life Too!” – Actor Soundararaja at ‘Dorothy’ Press Meet
Actor Soundararaja opened up about his association with filmmaker Karthik Subbaraj, his experience working on Dorothy, and his admiration for Keerthy Suresh and the film’s technical team at the press meet of the upcoming film.
Speaking about Karthik Subbaraj, Soundararaja said, “I have known Karthik Subbaraj since 2008. I never really got the right platform to speak about him, and Dorothy has given me that opportunity.
“When we think of Karthik’s films, one of the things I admire is the way he ensures that nothing about the film is revealed prematurely. Even after the film is completed, he wants audiences to experience it with a fresh perspective. He puts in tremendous effort to achieve that. His ideas and thought process are always beyond the conventional.
“I have learned a lot from Karthik, not just as a filmmaker but also in life. His way of thinking has influenced many of my personal experiences and brought about several changes in my own perspective. There is a great sense of discipline in the way he thinks and acts.
“One quality I particularly admire about Karthik is his love for his hometown and its people. No matter how much he has travelled, worked abroad or made films, his Tamil identity and emotional connection to his roots remain strong. I have witnessed this closely. Even when his films are entertaining, there is always an underlying emotion and a sense of pain that connects with Tamil culture and people.
“I sincerely wish that Karthik goes beyond Tamil Nadu and India and becomes a filmmaker recognised across the world. I have prayed for that many times. I would also like to thank his parents for giving the industry someone like Karthik.”
‘Dorothy’ Was an Opportunity I Had Been Waiting For
Speaking about Dorothy, Soundararaja recalled how he had repeatedly approached Karthik Subbaraj for an opportunity.
“Whenever Karthik started a new film, I would go to him and ask if there was an opportunity for me. I would always tell him, ‘If there is something for me, let me know. I would love to do it.’ I have worked with him on films like Jigarthanda and Jagame Thandhiram, and I have always trusted his judgement.
“If people recognise me as an actor even outside India and appreciate my work, Jigarthanda is one of the major reasons for that. The film has reached audiences in several countries, and even recently I met Tamil people abroad who spoke to me about Jigarthanda. Getting an opportunity to work with a filmmaker like Karthik has been special.
“When I got the opportunity to be part of Dorothy, there were a few commitments and difficulties, but I managed to make it work and went ahead with the film. Today, I am extremely happy that I did. I feel that if I had missed this film, I would have felt incomplete.
“Many people who watched the film appreciated my performance, including several technicians. The credit goes to Karthik and the young talents Sananth and Rishi as well.”
‘Sananth and Rishi Have Approached Cinema Professionally From the Beginning’
Praising Sananth and Rishi, Soundararaja said, “Both of them have struggled for many years and have worked hard to establish themselves in cinema. What I particularly appreciate is that they have approached cinema professionally right from the beginning.
“They understand how to showcase their talent through different mediums and how to use those opportunities to grow. Both Sananth and Rishi have followed that approach very well. I wish them great success after Dorothy and in the years ahead.”
‘Keerthy Suresh’s Humility Taught Me a Lot’
Soundararaja also spoke warmly about his experience of working with National Award-winning actress Keerthy Suresh.
“Keerthy Suresh is a huge actress and a National Award winner. Naturally, when I first got the opportunity to work with her, I had a little nervousness. But she is genuinely very humble and down to earth.
“In the 15-16 years that I have been in this industry, I have rarely seen someone at such a high position remain so grounded. Whatever the director asks her to do, she accepts it without hesitation and gives her best. That is something I have learned from her.
“I was so impressed by her personality and humility that I even asked her for an autograph. I became a fan of that human quality in her.
“During the shoot around Madurai, we worked through rain and sunshine and even travelled to locations where caravans could not reach. There were situations where she had to go some distance just to change costumes, but she never allowed any of that to affect her work. Her dedication and the importance she gives to time are truly admirable.
“It was really wonderful working with you, Keerthy Madam. I wish you many more successes.”
Soundararaja Praises Cinematographer Thiru
Soundararaja also expressed his happiness about working under cinematographer Thiru’s lens.
“I had heard a lot about Thiru sir from Karthik. Getting the opportunity to perform in front of his camera was a very happy experience for me. A cinematographer plays a crucial role in bringing a director’s creative vision to the screen. It was a great experience to be part of a film through his visual perspective,” he concluded.
