கார்த்தி-நயன்தாரா நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் ‘காஷ்மோரா’. கார்த்தி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இப்படம் சரித்திர கால பின்னணியில் உருவாகியிருப்பது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், வருகிற செப்டம்பர் 21-ந் தேதி இப்படத்தின் ஆடியோவை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு அமைத்திருக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.