Friday, October 11
Shadow

அழிந்த கலையை மற்றும் கலைஞர்கள் மீட்ட காஷ்மோர திரைப்படம்

காஷ்மோரா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. பட இயக்குநர் கோகுல், பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன், நடிகை ஸ்ரீதிவ்யா மற்றும் நாயகன் கார்த்தி உட்பட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்….
unnamed-1
இந்த நிகழ்ச்சியில் இரண்டு பாடல்களும் ட்ரைலர் திரையிட்டனர். படத்தின் ட்ரைலர் பார்க்கும்போது பாகுபலி படத்தை மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டமும் தொழில் நுட்பமும் தெரிகிறது இரண்டு பாடல்கள் இரண்டும் புது விதம் ஒன்று கார்த்திக் தன் குழுவினருடன் ஆடும் பாடல் திக் திக்குனு இந்த பாடலுக்கு நடனம் ராஜு சுந்தரம் நடனம் இன்றைய இளவட்டங்களை துள்ள விடும் அளவுக்கு பாடலும் நடமுள் உள்ளது என்று சொல்லணும் அடுத்த பாடல் ஓயா ஓயா என்ற பாடல் நயன்தாரா மற்றும் கார்த்தி நடிப்பில் ரத்னமகாதேவியாக நயன்தாரா கார்த்தி சும்மா அந்த அளவுக்கு இனிமையாக உள்ளது என்று தான் சொல்ல்லனும் .

இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி காஷ்மோரா படத்தில் நலிவடைந்த கலைஞர்கள் பலர் பணியாற்றியுள்ளதாகவும். மாற்றம் கண்டுவரும் சினிமா துறையில் மறக்கப்பட்ட கலைஞர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் பலரை காஷ்மோரா படத்தில் பணியாற்றியுள்ளனர் என தெரிவித்தார். மேலும் அதுபோன்ற கலைஞர்களை காபாற்றவாவது சரித்தரகால படங்கள் உருவாகவேண்டும் என கூறினார். கார்த்தி, நயன்தாரா, விவேக் நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள காஷ்மோரா தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளது
4c2e6bac-c802-4c9f-92ab-dda5abbcfedb
கார்த்தி, நயன்தாரா நடித்திருக்கும் காஷ்மோரா படத்தில் ரத்னமகாதேவி என்ற ராணி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களை இயக்கிய கோகுல் காஷ்மோராவை இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் படம் தயாராகியிருக்கிறது.

பல வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பை நடத்தினர். இந்தப் படத்தில் நயன்தாராவின் கெட்டப் மற்றும் கதாபாத்திர பெயரை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்துக்கான ஸ்பெஷல் கிராபிக்ஸ் காட்சிகள் எந்த வெளி நாட்டிலும் செய்யாமல் இந்தயாவிலே செய்தது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply