Monday, May 20
Shadow

காசி தமிழ் சங்கம விழாவில் இயக்குனர் சீனு ராமசாமிக்கு பாராட்டு !

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் வெளியான படம் மா மனிதன் இந்த படத்தை இயக்குனர் சீனுராமசாமி அவர்கள் இயக்கத்தில் விஜய்சேதுபதி காயத்ரிசங்கர் குருசோமசுந்தரம் நடித்த இசைஞானி இளையராஜா யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்த படம் மா மனிதன் இந்த படம் மிக பெரிய வெற்றியடைந்தது குறிப்பாக O TT யில் இந்த மிக பெரிய வெறியடைந்தது அதோடு மட்டும் இல்லை இந்த முக்கியமான சர்வதேசவிருதுகளை குவித்தது.தற்போது இந்த படத்துக்கு மேலும் ஒரு கவுரவம் கிடைத்துள்ளது.

ஆசியக்கண்டத்தின் மிகப்பெரிய 1,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரணாஸ் இந்து பல்கலைக்கழகம் நடத்திய தமிழர் பெருமை பேசும் காசி தமிழ் சங்கம விழாவில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி காயத்ரிசங்கர் குருசோமசுந்தரம் நடித்த இசைஞானி #இளையராஜா யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சியை மாண்புமிகு இந்தியகல்வித்துறை மத்திய இணையமைச்சர். அன்னபூர்ணா தேவி அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் காசித் #தமிழ்சங்கமம் நிர்வாகிகள் & பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர் டாக்டர் ஜெகதீஷன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் கர்ணன்,திருவிளையாடல் கப்பலோட்டியத் தமிழன் என நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் திரையிட உள்ளனர்.இதில் மாமனிதன் இடம் கொண்டது பெருமை.