Thursday, April 25
Shadow

காற்றுவெளியிடை – திரைவிமர்சனம் (காதல் காவியம் ) Rank 4.5/5

தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் கால் பதித்து முதல் நாள் முதல் இவரின் படங்கள் என்றாலே தனி மரியாதை அதே போல இவருக்கு என்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு இவரின் படங்கள் ஒன்று மிக சிறந்த காதல் காவியங்களாக இருக்கும் இல்லை மக்களுக்கு நல்ல செய்தி சொல்லும் படமாக தான் இருக்கும் அதிகம் காதல் படங்களை இயக்கியவர் என்ற பெருமையும் உண்டு இவரின் காதல் படங்கள் எல்லாமே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தபடங்கள் என்று தான் சொல்லணும்.

இந்திய திரையுலகிலே அதிகம் மதிக்க கூடிய இயக்குனர்களில் ஒருவர் இவர் படங்கள் தமிழ் மட்டும் இல்லை ஹிந்தி தெலுங்கு கன்னடம் என எல்லா மொழிகளிலும் மிகவும் கவனத்தை ஈர்க்க கூடிய படங்களாக தான் இருக்கும் ஒரு சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் இவர் இயக்கும் காதல் படம் அதோடு தேசப்பற்றும் சேர்ந்து கொடுக்கும் காதல் காவியம் என்று தான் சொல்லணும் .

அழகிய காதல் கதையுடன் வந்திருக்கிறார் ஜாம்பவான் இயக்குனர் மணிரத்னம். கிட்டத்தட்ட 25 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மணிரத்னம் & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளிவந்துள்ள ‘காற்று வெளியிடை’ திரைப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது?

மணிரத்தினம் உதவி இயக்குனர் கார்த்தி இந்த படத்தின் மூலம் மணிரத்தினம் ஹீரோவாக களம் இறங்குகிறார் இவருக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி. ருக்கமணி ஆர் ஜே .பாலாஜி டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடிப்பில் ஏ.ஆர் ரகுமான் இசையில் ரவிவர்மன் (வர்ணத்தில்) ஒளிப்பதிவில் இயக்குனர் மணிரத்தினம் ஏ.ஆர் ரகுமான் 25வருட இசைகூட்டனியில் வெளிவந்து இருக்கும் படம்

காற்று வெளியிடை படத்தின் கதை 1999-ல் தொடங்குகிறது. இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான கார்கில் போரில் பைலட்டான கார்த்தி, சண்டையின்போது இவர் பயணித்த போர் விமானம் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாக அதிலிருந்து தப்பித்து பாகிஸ்தானில் விழுகிறார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு இருட்டு அறையில் அடைக்கப்படுகிறார். அங்கிருந்தபடியே, தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கார்த்தி நினைத்துப் பார்ப்பதுபோல் கதை தொடங்குகிறது.

இந்திய விமானப்படையில் பைலட்டாக இருக்கும் கார்த்திக்கு ஒருநாள் சிறிய விபத்து ஏற்படுகிறது. ராணுவத்தில் டாக்டராக இருக்கும் நாயகி அதிதி ராவ் இவருக்கு சிகிச்சை அளிக்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவருக்குள்ளும் ஒரு ஆழமான காதல் உருவாகிவிடுகிறது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கும்போது, அவர்களுக்குள் அவ்வப்போது ஈகோ ஏற்பட்டு மோதல் உருவாகிறது. இந்த மோதல் நெடுநேரம் நீடிக்காமல் அடிக்கடி சமரசமும் ஆகிக் கொள்கிறார்கள்.

ஒருகட்டத்தில் திருமணத்திற்கு முன்பே இருவரும் நெருக்கமாகிறார்கள். இதனால், அதிதி ராவ் கர்ப்பமடைகிறாள். இவர்களுக்குள் இருந்த சிறுசிறு மோதல், ஒருநாள் பூதாகரமாகிவிட கோபத்தில் அதிதியை விட்டு பிரிந்துபோகிறார் கார்த்தி. அந்த நேரத்தில்தான் கார்கில் போர் ஆரம்பிக்க, கார்த்தி போருக்கு போய் பாகிஸ்தானில் சிக்கிக் கொள்கிறார்.

கர்ப்பிணியாக விட்டுவந்த தனது காதலியிடம் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று எண்ணத்தில் பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கிறார் கார்த்தி. இறுதியில், அவர் அங்கிருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்து தனது காதலியை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.

ஸ்லிம் அன்ட் ட்ரிம்மாக… அப்படியே பைலட்டை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் கார்த்தி. அவரின் வித்தியாசமான உடல்மொழியும், வசன உச்சரிப்பும் ‘வருண்’ கேரக்டருக்கு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. இப்படத்திற்குப் பிறகு கார்த்திக்கான பெண் ரசிகைகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என்பது நிச்சயம்.பல காட்சிகளில் கார்த்தி நடிப்பை ரசிக்கலாம் அந்த அளவுக்கு மிக யதார்த்தமாக நடித்திருந்தார் அதே போல மணிரத்தினம் வசனம் கார்த்தி உச்சரிக்கும்போது மிகவும் ரசிக்கும்படி அமைந்துள்ளது .

கார்த்திக்கு ஜோடியாக நடித்திருக்கும் அதிதி ராவ் ஹைதரி, பாலிவுட்டிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார். அழகாக, இயல்பாக அவரின் பங்களிப்பு ‘காற்று வெளியிடை’ படத்திற்கு பெரிய பலம். கார்த்தி நடிப்புக்கு மிகவும் ஈடுகொடுத்து நடித்துள்ளார் தமிழுக்கு மிகவும் பொருத்தமான நடிகை காதலும் சரி கோவம் பாடல் இப்படி எல்லா காட்சிகளிலும் மிளிர்கிறார்.

ஆர். ஜே பாலாஜி முதல் முறையாக குணசித்திரத்தில் அருமையாக நடித்துள்ளார் அவருக்கு காமெடியை விட இந்த கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருக்கு என்று சொல்லலாம் அதிதியை ஒரு தளியாக காதலிக்கும் ஆர்.ஜே பாலாஜி மிகவும் சிறப்பாக செய்துள்ளார் .

நீண்ட நாளுக்கு பிறகு நடிகை ருக்மணி சிறப்பு அருமையான நடிப்பு அதைவிட நடனம் சும்மா பின்னி எடுத்துள்ளார். டெல்லி கணேஷ் எப்பவும் போல தாத்தாவாக சிறப்பாக நடித்துள்ளார் .

இயக்குனர் மணிரத்தினம் காதல் படங்களில் இந்த மிக முக்கியமான படமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று சொல்லலாம் ஒரு பைட்டர் பைலட் ராணுவ டாக்டர் இருவருக்கும் காதலும் ஈகோ இவற்றை மையமாக வைத்து அதற்கேற்ப காட்சிகள் குறிப்பாக இவர் தேர்ந்தெடுத்த லோக்காஷன் ஸ்ரீநகர் மற்றும் லடாக் போன்ற இடங்கள் மிகவும் அருமை இந்த இடங்களை நம்மால் நேரில் சென்று பார்க்க முடியாது இந்த படம் மூலம் பார்த்து கொள்ளலாம் பைட்டர் பைலட் பற்றிய ராணுவ விஷயங்கள் நமக்கு தெரியாத பல விஷயங்களை சொல்லி இருக்கிறார். அதோடு மிக அழகான காதல் கவிதையை அதாவது கதையை தந்துள்ளார் என்று தான் சொல்லணும் மணிரத்தினதினால் மட்டும் தான் இந்த மாதிரியான படத்தை கொடுக்க முடியும் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்.

இந்த படத்தின் கதை மற்றும் மணிரத்தினதின் பலம் என்று சொன்னால் அது ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் என்று தான் சொல்லணும் அடேங்கப்பா என்ன மாதிரியான ஒரு ஒளிப்பதிவு காட்சிகள இல்லை ஓவியனின் வர்ணாமா என்று பிரமிக்கவைக்கும் காட்சிகள் குறிப்பாக விமானதளங்களை மிக அருமையாக காண்பிதுள்ளார்.

ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் மட்டும் இல்லை பின்னணி இசையும் அற்புதம் இல்லை ஒரு மேஜிக் என்று தான் சொல்லணும் இல்லை என்றால் இருவரும் 25 வருடம் சேர்ந்து வேலை செய்யமுடியுமா இந்த இரவரின் புரிதல் தான் இசையாக வருகிறது என்றுகூட சொல்லலாம் அந்த அளவுக்கு சிறப்பான இசை .

மொத்தத்தில் காற்று வெளியிடை ஒரு காதல் காவியம் Rank 4.5/5

Leave a Reply