Tuesday, September 10
Shadow

கிழிந்த பாவாடை தாவணி உடையணிந்து நடித்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

பாம்பு சட்டை படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கிழிந்த நிலையில் உள்ள பாவாடை தாவணியில் ஒரு ஏழை பெண்ணாக வருகிறாராம்.

தமிழில் ‘இது என்ன மாயம்’, ‘ரஜினிமுருகன்’, ‘தொடரி’, ‘ரெமோ’ ஆகிய படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் நடித்த இரண்டாவது படம் ‘பாம்பு சட்டை’.

ஆனால் பணப் பிரச்னையால் ‘பாம்பு சட்டை’ வெளியாக முடியாமல் திணறுகிறது.
இந்தப் படத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடித்துள்ளார். தற்போது பணப் பிரச்சினை தீர்க்கப்பட்டு படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் புரட்சிகரமான இளைஞனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் எக்ஸ்போட்டில் வேலை செய்யும் ஒரு ஏழை பெண்ணாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஏழ்மையை வெளிப்படுத்தும் கிழிந்த பாவாடை தாவணி உடையணிந்து நடித்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

மேலும் படத்தில் சில காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் வகையில் நடிப்பில் அசத்தியுள்ளாராம் கீர்த்தி சுரேஷ். இதுவரை கலப்பான கீர்த்தி சுரேஷ் இந்த படம் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிருபிப்பார் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரம் .

Leave a Reply