Thursday, January 16
Shadow

கீர்த்தி சுரேஷ் பார்த்து பொறாமை படும் சக நடிகைகள்

கீர்த்தி சுரேஷின் கிடுகிடு வளர்ச்சியை பார்த்து பிற நடிகைகள் மிரண்டு போயுள்ளனர். இது என்ன மாயம் படம் மூலம் கேரளாவில் இருந்து கோலிவுட் வந்தவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த ரஜினி முருகன் படத்தில் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு மீண்டும் சிவாவுடன் சேர்ந்து ரெமோ படத்தில் நடித்தார்.

சிவகார்த்திகேயனுடன் நடித்து வந்த கீர்த்திக்கு இளைய தளபதி விஜய்யின் பைரவா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பைரவா படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது.

வந்த வேகத்தில் விஜய்க்கு ஜோடியாகிவிட்டாரே கீர்த்தி என பிற நடிகைகள் வியந்து கொண்டிருந்தபோதே சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தின் நாயகியாகிவிட்டார்.

விஷாலின் சண்டைக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்திற்காக மஞ்சிமா மோகனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. நடிக்க வந்த வேகத்தில் கீர்த்திக்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதை பார்த்து பிற தமிழ் நடிகைகள் பொறாமை கலந்த வியப்பில் உள்ளன

Leave a Reply