’கொம்பன்’ பட இயக்குநர் முத்தையா அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்குகிறார். எப்போதும் போல அவரது கிராமத்து பாணியில் உருவாகும் இப்படத்தில் முதலில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
குறைந்த காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வரும் கீர்த்தி சுரேஷ், இந்த படத்தின் நாயகியானது ஆச்சரியமான விஷயம் இல்லை, ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்படி, சூர்யா படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டுள்ளாராம். அவருக்கு பதிலாக ‘இறுதி சுற்று’ படத்தில் நடித்த ரித்விகா சிங்கை சூர்யாவுக்கு ஜோடியாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
தற்போது இதற்கான பேச்சுவார்த்தையில் படக்குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.