Friday, October 11
Shadow

கொடி கொண்டாட்டத்துக்கு தயாராகும் தனுஷ் ரசிகர்கள்

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த தொடரி படம் கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியானது. முழுக்க முழுக்க ரயிலில் நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள அந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் உற்சாகத்தில் காணப்படுகிறார் தனுஷ்.

இந்த நிலையில், துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் முதன்முதலாக அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில் நடித்துள்ள கொடி படமும் ரிலீசு க்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் தனுசுடன் திரிஷா, அனுபமா உள்பட பலர் நடித்துள்ளனர். அரசியல் பின்னணி கொண்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாரித்து நடித்துள்ள தனுஷ், செப்டம்பர் 28-ந்தேதி கொடி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருப்பதாக டுவிட் செய்திருப்பவர், படம் தீபாவளிக்கு வெளியாகயிருப்பதையும் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply