Wednesday, April 24
Shadow

கொடி – திரைவிமர்சனம் (கொடி பட்டொளி வீசி பறக்கிறது) RANK3.5/5

அரசியல் பரமபத ஆட்டம் தான் கொடி ஏணி ஏற்றமும் பாம்பு இறக்கமும் இதை மையமாக வைத்து எடுக்க பட்டகதை தான் கொடி

கருணாஸ் இதுவரை தனுஷ்க்கு நண்பனாக வந்தவர் இதில் தனுஷ்க்கு அப்பா அம்மா சரண்யா இவர்களின் இரட்டை குழந்தைகள் தான் கருணாஸ் மகன்கள் கருணாஸ் தீவிர அரசியல்வாதி இரண்டு கட்சி ஒன்று S.A. சந்திரசேகர் கட்சி மற்றும் ஒன்று விஜயகுமார் கட்சி கருணாஸ் S.A. சந்திரசேகர் கட்சியின் தீவிர தொண்டன் அவருக்கு எல்லாமே அரசியல் தான் ஆனால் வாய் பேசமுடியாதவர் இரட்டைக் குழந்தைகளில் அண்ணன் தனுஷுக்கு (கொடி) அரசியல் ஆர்வத்தை விதைக்கிறார் அப்பா கருணாஸ். தந்தை தன் அபிமான கட்சிக்காக உயிர் துறப்பதால் அந்த ஆசை மகனுக்குள் ஆழமாக வேர்விடுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியோடே சேர்ந்து வளர்ந்து அடிபொடித் தொண்டனில் இருந்து இளைஞர் அணி அமைப்பாளராக வளர்கிறார் தனுஷ். ஆளும் கட்சியைச் சேர்ந்த ருத்ராவும் (த்ரிஷா) தனுஷும் “பர்சனல் வேற பாலிடிக்ஸ் வேற” என்ற பாலிசி காதலர்கள். இதற்கு இடையில் தம்பி அன்புக்கும் (ரெட்டை தீபாவளி), அனுபமா பரமேஷ்வரனுக்கும் காதல்.

மூடப்பட்ட தொழிற்சாலை ஒன்றால் ஏற்படும் பாதரச பாதிப்பு பற்றிய ஆதாரம் தனுஷிடம் வருகிறது. அதில் சம்பந்தப்பட்ட கைகள் அதை மறைக்க தனுஷுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்து நிறுத்துகிறார்கள், அவருக்குப் போட்டியாக த்ரிஷா. இந்த அரசியல் சடுகுடு என்னென்ன செய்கிறது, தொழிற்சாலை என்ன ஆனது, யாருக்கு யார் வில்லன், யார் ஜோடி, தனுஷுக்கு ஏன் அவ்வளவு பெரிய தாடி என மெதுவாக பறக்க ஆரம்பிக்கிறது கொடி.

முதல் முறையாக டபுள் ரோல். தாடியோடு வரும் கொடிக்கு தான் அதிக காட்சிகள், அதிக முக்கியத்துவம் இரண்டாவது தனுஷ் காலேஜ் புரொஃபசர் அன்பு, வேட்டி சட்டை, கண்ணாடி, தாடி என்றால் கொடி. இரண்டு கதாபாத்திரமும் பின்னி எடுத்து இருக்கிறார் அலட்டி கொள்ளாமல் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக அழகாக நடித்துள்ளார் தனுஷ் என்று தான் சொல்லனும் அண்ணன் கொடி அரசியல்வாதிகாண தோற்ற்றம் நடையுடை பாவனை அனைத்தும் சிறப்பாக செய்துள்ளார். அதேபோல் அன்பு காலேஜ் புரொஃபசர் அந்த கதாபாத்திரமும் சிறப்பாக அமைதியாக செய்துள்ளார். இதே காலேஜ் புரொஃபசர் அரசியல்வாதியாக மாறும்போது அதற்கு ஏற்ப நடிப்பு தனுஷ் எப்ப்வவும் போல் அசத்தல்

புதுமுகமாக அறிமுகம் அனுபாமா நடிப்பில் சும்மா பிச்சு உதறுகிறார் முட்டை வியாபாரம் செய்யும் அனுபாமா செய்யும் மோசடிகள் அருமை அதேபோல் தனுஷ் மற்றும் சரண்யாவிடம் மோதும் காட்சிகள் அரங்கமே அதிருகிறது அந்த அளவுக்கு பிரமாதமாக நடித்துள்ளார்.

த்ரிஷா இருக்கும் இளமையைப் பார்த்தால், இன்னும் ஒரு ரவுண்டு வரலாம். கோலிவுட்டின் அரசியல் சினிமாவில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் ரொம்பவே ஆச்சர்யம். முதல் முறையாக வில்லி ஆனால் பல இடங்களில் கஞ்சிபோட்ட காக்கி சட்டை போல இருக்கிறார். இன்னும் கொஞ்சம் எதார்த்தம் காண்பித்து இருக்கலாம், கத்தி பட விஜய் போல இரும்புக் கம்பியைப் பிடித்து அடிக்கும் போது லைட்டாக சிரிப்பு வருகிறது.

எஸ்.ஏ.சந்திரசேகர்,சரண்யா பொன்வண்ணன்,காளி வெங்கட் என சப்போர்ட் காஸ்டிங் செய்யும் அனைவருமே அவர்களது கதாப்பாத்திரத்தை சரியாக செய்து இருக்கிறார்கள். காமெடி நேரத்தில் சிரிக்க வைக்கிறார். செண்டிமெண்ட்டில் கலங்க வைக்கிறார் காளி.

இயக்குனர் துரை செந்தில் நல்ல கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார் என்று தான் சொல்லணும் முதல் படம் போல இதில் மெசேஜ் எல்லாம் இல்லை அரசியல்வாதிகள் தோல் உரித்து கடும் படம் சில இடங்களில் தடுமாறியுள்ளார் இயக்குனர் துரை அதிலும் இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் பாதரசம் விஷயத்திலும் கொடி கொலையிலும் கவனம் இன்னும் கொஞ்சம் செலுத்தி இருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்து இருக்கும.

இசை சந்தோஷ் நாராயணன் பாடல்கள் ரசிக்கும் படியுள்ளது எஸ்.வெங்கடேசன் ஒளிப்பதிவு அருமை இரண்டு தனுஷ்க்கு வித்தியாசம் எல்லாம் சிறப்பு கதைக்கு தேவையான ஒளிப்பதிவு

மொத்தத்தில் கொடி பட்டொளி வீசி பறக்கிறது நிச்சயம் மக்கள் இந்த கொடிக்கு ஆதரவு தருவார்கள் என்பதில் எந்த சந்தேகம் இல்லை

#RANK3.5/5

Leave a Reply