Friday, December 6
Shadow

கொடிவீரன் தீபாவளி ரிலீஸ் சிக்கல் தவிக்கும் வினியோகிஸ்தர்

குடும்பங்கள் விரும்பிவந்து பார்க்க கூடிய சினிமாக்களில் சசிக்குமார் நடித்த படங்களும் கடந்த பத்தாண்டுகளாக இடம் பிடித்து வருகின்றன.

2008ல் வெளியான சுப்ரமணியபுரம் முதல் பலே வெள்ளையத்தேவா வரை 11 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள சசிக்குமார் தற்போது 12வதாக நடித்து முடித்துள்ள படம் கொடிவீரன்.

சசிக்குமார் நடித்தகுட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா மீண்டும் கொடிவீரன் படத்தில் இணைந்துள்ளார். சசிக்குமார் நாயகனாக நடித்து வெளியான படங்களில் 20 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டிய படம் குட்டிப்புலி.

குட்டிப்புலி போன்று கொடிவீரன்பாக்ஸ் ஹிட்டடிக்கும் என தியேட்டர், விநியோகஸ்தர்கள் தரப்பு பெரிதும் நம்புகின்றனர். தீபாவளிக்கு மெர் சல் வருவதால் மற்ற படங்கள் எதுவும் வரவில்லை.

கொடிவீரன் தீபாவளிக்கு உறுதியாக வருகிறது என தயாரிப்பு தாப்பு அரிவித்து உள்ளது. தீபாவளி வசூல் தமிழ் சினிமாவில் முக்கியமானது.

கொடிவீரன் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமை வாங்குவதற்கு கடுமையான போட்டி நிலவியது. இதற்கு முன் வெளிவந்த பலே வெள்ளையதேவா தோல்வி படமாக இருந்தாலும் கொடிவீரன் 12 கோடிக்கு வியாபாரமாகி உள்ளது.

கொடிவீரன் படத்தின் உரிமையை 12 கோடிக்கு கோவையை சேர்ந்த சிதம்பரம் வாங்கியுள்ளார். சினிமாவிற்கு புதியவரான இவரை முதலீடு செய்ய அழைத்து வந்தவர் சேலம் விநியோகஸ்தர் 7 G சிவா.

தீபாவளி ரீலீஸ் என்பதால் ஏரியா வியாபாரம் சூடு பிடித்தது. 20% லாபம் கிடைக்க கூடிய வாய்ப்பு இருப்பதை அறிந்து கொண்ட பைனான்ஸ் நாட்டாமைகள் படத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கொடிவீரன் படத்திற்கு நெகட்டிவ் பைனான்ஸ் கொடுத்திருப்பது திருச்சி விநியோகஸ்தர் பரதன் பிலிம்ஸ். கொடுத்த பணம் ரீலீசுக்கு முன் வட்டியுடன் கொடுத்தால் போதும். அதுவும் முடியவில்லை என்றால் கடன் வாங்கிய நபர்களின் நன்மதிப்பை பொறுத்து தாமதமாக வாங்கி கொள்வதும் உண்டு. படத்தை அநாகரிகமாக கைப்பற்ற முயற்சிக்கவோ, ரீலீஸ் நெருக்கடி கொடுக்கவோ மாட்டார்கள்.

மதுரை பைனான்சியர் அப்படி கிடையாது ரீலீசுக்கு முன் அசல் – வட்டியை கொடுத்து விட வேண்டும் இல்லையென்றால் தாங்கள் கூறும் விலைக்கு விநியோக உரிமையை தர வேண்டும். என அன்பு நெருக்கடி கொடுப்பார்.

அப்படி ஒரு நெருக்கடியல்் கொடிவீரன் தற்போது சிக்கி கொண்டுள்ளது. முந்தைய படங்களுக்கு பை னான்ஸ் வாங்கிய தொகையில் பாக்கி இருப்பதால் அதனை திருப்பிக் கேட்டு சசிக்குமாருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளது,

மதுரை பைனான்ஸ் தரப்பு .முடியவில்லை என்றால் படத்தை தங்களிடம் தான் கொடுக்க வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தும் நடவடிக்கை இது என்பது கோடம்பாக்கம் அறிந்ததே. இச் செயல் சினிமா வியாபாரத்தில்நாணயமான சசிக்குமாரை சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது

இது போன்ற பிரச்சினைகள் சசிக்குமாருக்கு புதிதல்ல. இதில் இருந்து சசிக்குமார் விடுபட்டு வருவார் தீபாவளிக்கு குடும்பத்துடன் பார்க்கும் படமாக கொடிவீரன்இருக்கும் என்கிறது தயாரிப்பு தரப்பு.

Leave a Reply