தல அஜித் எப்போதும் தன் முடிவிலேயே உறுதியாக இருப்பார். அவரை சுற்றி பல முன்னணி இயக்குனர்கள் வரிசைக்கட்டி நிற்க, அவரோ சிவாவிற்கு கால்ஷிட் கொடுத்தார்.
இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பல்கேரியாவில் நடந்து முடிந்தது.
இதில் காஜல் அகர்வாலும் கலந்துக்கொண்டார், இப்படத்தின் படப்பிடிப்பு இத்தனை வேகமாக நடக்க அஜித் தான் காரணமாம்.
இரவு-பகல் என்றில்லாமல் அஜித் பணியாற்ற சொன்ன தேதிக்கு முன்பே முதற்க்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு முன்னணி நடிகரின் படம் முதற்க்கட்ட படப்பிடிப்பு இத்தனை சீக்கிரம் முடிவது அஜித்திற்கே சாத்தியம் என கோலிவுட்டே ஆச்சரியத்தில் உள்ளது.
மேலும், கொடுத்த பட்ஜெட்டை விட குறைவாக எடுத்து முடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் எல்லா காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளது என்ற சந்தோசமும் தானாம்