Saturday, February 15
Shadow

குரங்கு பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர், வெளியிட்ட மம்முட்டி

இப்போதெல்லாம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர், டிரெய்லரை வெளியிட செலிபிரிட்டிகளைத் தேடி அலைய ஆரம்பித்துவிட்டனர்.

விழாவுக்கு வர முடியாது என்றால், கையோடு கொண்டு போன லேப்-டாப்பை திறந்து வைத்தபடி ஒரு போட்டோவை எடுத்துக் கொண்டு வந்து, அவர் வெளியிட்டார். இவர் வெளியிட்டார் என்று ஊடகங்களுக்கு செய்தி அனுப்புகிறார்கள்.

இதனால் படப்பிடிப்பு தளத்துக்குள் யாராவது லேப்டாப் உடன் வந்தாலே நடிகர் நடிகைகள் பயந்துபோகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, டைரக்ஷனை மறந்துவிட்டு நடிப்பில கவனம் செலுத்தி வரும் இயக்குநர் பாரதிராஜா, குரங்குபொம்மை என்ற படத்தில் விதார்த்துக்கு அப்பாவாக நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட சில ஹீரோக்களை முயற்சி செய்தனர்.

யாரும் செட்டாகவில்லை என்பதால் கடைசியாக நடிகர் மம்முட்டியை அணுகினார்கள். அதற்கு ஒப்புக்கொண்ட மம்முட்டி நேற்று மாலை 6 மணிக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் .

Leave a Reply