லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம் ‘ஐரா’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோட்டபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தபடம் ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். ஐரா படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், 700-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கான புக்கிங் நாளை முதல் தொடங்க உள்ளது.
மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா என கதாநாயகியை மையப்படுத்திய கதையில் நடிகை நயன்தாரா நடித்து வரும் நிலையில் இந்தப் படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நயன்தாராவுக்கு ஜோடியாக கலையரசன் நடித்துள்ள இந்தப்படத்தில் யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘சூப்பரா இருக்கிற படத்தை மொக்கைனு சொல்லணும், பிரைம் மினிஸ்டர கழுவி கழுவி ஊத்தனும், எது நடந்தாலும் இல்லுமினாட்டிதான் காரணம்னு சொல்லணும்’ என்று நயன்தாரா பேசும் வசனங்கள் சமூகவலைத்தளங்களை நக்கலடிக்கின்றன. அதுமட்டுமல்ல, ஐரா படத்தின் கதையை யூகிப்பதுபோல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.