Tuesday, October 8
Shadow

நடிகர் ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் வெளியீடு: இந்நிறுவனம் சுயாதீன கலைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது.

நடிகர் ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் வெளியீடு: இந்நிறுவனம் சுயாதீன கலைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது.

இந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களை வழங்கி வரும் நடிகர் ஜீவா, திரையுலகில் இன்று 21 வருடங்களை நிறைவு செய்கிறார். வெற்றிகரமாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய அவர், அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார். அவரது ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா, சுதந்திரக் கலைஞர்களுக்கு அர்ப்பணித்து, அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்கும் நிகழ்ச்சி, ஊடகங்கள் மற்றும் நடிகர்கள் ஜித்தன் ரமேஷ்,ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால்,மிர்ச்சி சிவா,விச்சு விஸ்வநாத்,விவேக் பிரசன்னா, கலையரசன்,ஆதவ் கண்ணதாசன், ஜெகன்,இயக்குனர் மோகன்.G , நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, சித்தார்த் விபின், சந்தோஷ் நாராயணன் மற்றும் பல பிரபலங்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

பெரும்பாலும் முக்கிய கதையமைப்புகளால் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையில், எங்கள் மியூசிக் லேபிள் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வளர்ப்பதில் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு கலைஞரும் பிரகாசிக்கவும், அவர்களின் தனித்துவமான குரலை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் தகுதியானவர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

எங்கள் தளம் உருவாக்கம் முதல் உலகளாவிய அங்கீகாரம் வரை, அவர்களின் இசைக் கலைஞர் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் சுயாதீன கலைஞர்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட இசை பாணிகள் மற்றும் வகைகளைத் தழுவி உருவாக்குவதன் மூலம், இசைத் துறையின் செழுமைக்கும் அதிர்வுக்கும் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

நிகழ்வில் நடிகர் ஜீவா பேசும்பொழுது,”கடந்த ஒரு வருடமாக இந்த ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் நிறுவனத்திற்காக என்னென்ன தயாரிப்புகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை இன்று வெளியிடுகிறோம்.மேலும் இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களுக்கான பாடல்கள் மற்றும் குறும்படங்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எங்களது தாய் நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக 40-க்கும்மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது போல இந்த நிறுவனம் மூலம் சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களின் கூறிய சிறுகதையின் அடிப்படையில் ‘யார் சொல்வததையும் கேட்காமல் நமது வேலையை நாம் செய்து கொண்டே முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்’ என்பதை அடிப்படையாக வைத்து இந்நிறுவனத்திற்கு ‘டெப்ஃ ஃப்ராக்ஸ்ஜீவா பேசும் பொழுது “கடந்த ஒரு வருடமாக இந்த ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் நிறுவனத்திற்காக என்னென்ன தயாரிப்புகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை இன்று வெளியிடுகிறோம்.மேலும் இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களுக்கான பாடல்கள் மற்றும் குறும்படங்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எங்களது தாய் நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக 40-க்கும்மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது போல இந்த நிறுவனம் மூலம் சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களின் கூறிய சிறுகதையின் அடிப்படையில் ‘யார் சொல்வததையும் கேட்காமல் நமது வேலையை நாம் செய்து கொண்டே முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்’ என்பதை அடிப்படையாக வைத்து இந்நிறுவனத்திற்கு ‘டெப்ஃ ஃப்ராக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கலைக்கூடராமாக இருக்கும்” என அனைவரையும் வரவேற்று பேசினார்.

*சந்தோஷ் நாராயணன்*

பின்னர் கில்லா.கே என்பவரின் சுயாதீன கலைஞரின் ‘புரிய வை’ பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் வெளியிட்டு பேசும்பொழுது தனது மிகப்பெரிய சுயாதீன பாடலாக ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் அமைந்ததாகவும் தானும் ஒரு மியூசிக் லேபிள் நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாகவும் ஜீவா போன்றவர்கள் மியூசிக் லேபிள் நிறுவனம் தொடங்கி இருப்பது ஒரே நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பதற்கு உதவிஆக இருக்கும். பின்னர் ஜீவா போன்றவர்கள் இந்த துறையில் நுழைவது மகிழ்ச்சியடைகிறேன்.ஜீவா போன்ற வர்த்தக திறமை கொண்டவர்களும் கலை ஆர்வம் கொண்டவர்களும் இருந்தால் சுயாதீன கலைஞர்களுக்கு வானமே எல்லை என்று கூறினார்.
தமிழ்நாட்டிலேயே 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயாதீன பாடல் கலைஞர்கள் இருப்பதாகவும் அவருடைய சிறு ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததாகவும் கூறினார். அவர்களுக்கான மேடையாக இந்த ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் நிறுவனம் அமையும் என்று வாழ்த்தினார்.

*விஷ்ணு விஷால்*

‘பனிமேல் விழும் கனல் காற்று’ என்ற குறும்படத்தை வெளியிட்டு பேசிய விஷ்ணு விஷால் திரை வாழ்க்கையை துவங்கும்போது வாய்ப்புக்காக நிறைய அலைந்திருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் திரைத்துறைக்கு வந்து 15 வருடங்களை நிறைவு செய்ததாகவும், 13 ஆண்டுகள் ஜீவாவுடன் நட்பு இருப்பதாகவும் சினிமாவில் நிறைய வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அந்த வாய்ப்புக்கான சரியான வழியை புதிய இளம்தலைமுறை சுயாதீன கலைஞர்களுக்கு இந்த மாதிரியான ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மூலம் உருவாக்கி உள்ளார். புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அவரது ரத்தத்திலேயே உள்ளதாகவும் தந்தையும் இதுபோல நிறைய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனமும் இந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக விஷ்ணு விஷால் கூறினார். தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

*கார்த்தி*

நடிகர் கார்த்தி ‘த’ பாப் சுயாதீன பாடலை வெளியிட்டு பேசும் பொழுது ‘த’ பாப் எனப்படும் நம் தமிழ் பெண்கள் சிறப்பாக பாடுகிறார்கள்,ஆடுகிறார்கள், அவர்களே இசைக்கோர்வை சேர்க்கிறார்கள் இது போன்ற வாய்ப்புகளை தேடும் திறமையாளர்களுக்கு புதிய முகவரி எனக்கு கிடைத்திருக்கிறது. இதன் பிறகு யாராவது இது போன்ற வாய்ப்பு தேடி வருபவர்களை ஜீவாவிடம் அறிமுகப்படுத்துவேன். ஜீவா ஒரு பள்ளி தோழரைப் போன்றவர்.தனது தந்தையை போலவே ஜீவாவிற்கும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் மனது உள்ளது. ‘ராம்’ திரைப்படத்திற்காக சைப்ரஸ் நாட்டின் சர்வதேச திரைப்பட விருதை கார்த்தியும் இயக்குனர் அமீரும் ஜீவா சார்பில் பெற்று வந்ததாக நினைவுகூர்ந்தார்.
அப்போது பேசிய ஜீவா அந்த விருது வாங்கி கொடுத்ததற்கு தற்போது இந்த மேடையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அதுபோல சுயாதீன கலைஞர்களின் ஆர்வத்திற்கு ஊக்கமளித்த பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

*ஜெயம் ரவி*

சுயாதீன பாடகர் கென்னிஷா அவர்களின் ‘இதை யார் சொல்வாரோ’ என்ற பாடலை நடிகர் ஜெயம் ரவி வெளியீட்டு பேசும் பொழுது சமூக வலைத்தளங்கள் வாய்ப்புகளை பெறுவதற்கு ஒரு சுலபமான வழியாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் எங்களை விட சுயாதீன கலைஞர்களுக்கான ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர். இது போன்ற சுயாதீன கலைஞர்களுக்கு ஜீவா போன்ற வழிகாட்டி கிடைத்திருப்பது பெரிய பரிசு. அவருக்கு தந்தை ஒரு வழிகாட்டியாக இருந்தது போல அவர் உங்களுக்கு இருப்பார்.நடிகர் ஜீவா தமக்கு நீண்ட கால நண்பர் ஆவார். தனது முதல் பட படப்பிடிப்பு நடக்கும் பொழுது இருவரும் ரயில் போன்ற செட் அமைப்பில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் இருவருக்கும் அன்றிலிருந்து ரயில் சிநேகிதம் தொடங்கியதாக விளையாட்டாக கூறினார். ஜீவா,ஜெயம் ரவி, ஜாமி என்கிற ஆர்யா மூவரும் சிறந்த நண்பர்களாக இருப்பதாகவும் உரிமையுடன் கூறிக் கொண்டார்.இதே போல அவருக்கு அவர் எனக்கு ஒரு குடும்ப நண்பனாக ஆகிவிட்டார். எங்களை போல உங்களுக்கும் அவர் ஒரு குடும்ப
இருப்பார்.இந்த டெஃப் ஃப்ராக்ஸ் நிறுவனம் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

*ஜசரி K.கணேஷ்*

‘Folk Agenda’ ஆவணத் திரைப்படத்தை வெளியிட்டு பேசிய திரு.ஐசரி.கே.கணேஷ் அவர்கள் நடிகர் ஜீவா அவர்களிடம் செல்லமாக கோபித்துக் கொண்டார். இந்நிறுவனம் தொடங்குவது பற்றி தன்னிடம் தகவல் கொடுக்கவேயில்லை என்று. இந்நிறுவனத்துடன் இணைந்து பயணிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.இந்த டெஃப் ஃப்ராக்ஸ் நிறுவனம் மேன்மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
அப்போது பேசிய ஜீவா “தமிழ் திரையுலகில் இருக்கும் குறிப்பிடத்தக்க பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் ஒன்று.ஐசரி K.கணேஷ் அவர்களும் மிகப் பிரமாண்டமான படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் போன்ற புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்துகிறார்” என்றார்.

*விஜய் ஆண்டனி*

விஜய் ஆண்டனி அவர்கள் பேசும் பொழுது அவர் வெளியிட்ட’ஒவ்வொரு பெண்ணுக்கும்’ சுயாதீனப் பாடலில் பணிபுரிந்தவர்கள் திறமையை வெளிப்படுத்தி இருப்பதாகவும் தானும் ஒரு ‘டெஃப் ஃப்ராக்’தான் என்றும் யாருடைய பேச்சையும் பொருட்படுத்தாமல் இசையமைப்பாளராக,நடிகராக, இயக்குனராக அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி வந்ததாக கூறினார்.

நமக்கென்று ஒரு நம்பிக்கை இருந்தால் நாம் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
இந்திய அளவில் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ நிறுவனம் பெரிய அளவில் வரவேண்டும் என வாழ்த்தினார்.
இந்த மாதிரியான நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ள ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

*’மிர்ச்சி’ சிவா*

‘ஏக் லடுக்கா ஏக் லடுக்கி’ எனும் குறும்படத்தை வெளியிட்டு பேசிய ‘மிர்ச்சி’சிவா அவர்கள் “திறமை என்றும் ஒளித்து வைக்க முடியாது அது என்றோ ஒருநாள் வெளிவந்தே தீரும்; சமூக வலைத்தளங்களில் வரும் எதிர்மறையான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,நம் திறமை மீது நம்பிக்கை வைத்து முன்னேற்றக் கொண்டே இருக்க வேண்டும். ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ உலக அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

*கலையரசன் & ஆதவ் கண்ணதாசன்*

‘இனியன்’ நடித்துள்ள
‘Funtastic’ என்னும் இணைய தொடரின் முன்னோட்டத்தை வெளியிட்டு பேசிய கலையரசன் மற்றும் கண்ணதாசன் இருவரும் படக்குழுவினரை வாழ்த்தினர். கலையரசன் பேசும் பொழுது முகமூடி படத்தில் ஜீவாவுடன் இணைந்து பணியாற்றியதாகவும் அவர் ஒரு நல்ல நண்பராக தன்னுடன் பழகியதாகவும் மகிழ்ச்சியாக கூறிக்கொண்டார்.

*Launch of Actor Jiiva’s Deaffrogs records Music Label: Focused on Empowering Independent Artists*

Actor Jiiva, who has been delivering critically and commercially successful films in Indian Cinema, completes 21 years in the industry. Embarking on his journey ahead, he has ventured in music productuon. The launch of his music label Deaffrogs Records, a groundbreaking venture dedicated to championing independent artists and providing them with a platform to showcase their unique talents took place today in the presence of the Media and eminent celebrities from the industry like Actors Jayam Ravi, Karthi, Vishnu Vishal, Mirchi Shiva, Kalaiyarasan, Aadhav Kannadasan, Jithan Ramesh, Music Directors Vijay Antony, Santhosh Narayanan, Producer Ishari K Ganesh, Director Mohan G and others.

In an industry often dominated by mainstream narratives, the music label is committed to fostering creativity and individuality. According to Deaf Frogs, they believe that every artist deserves the opportunity to shine and share their distinct voice with the world.

This platform is designed to support independent artists at every stage of their careers, from discovery to global recognition. By embracing a diverse range of musical styles and genres, they aim to contribute to the richness and vibrancy of the music industry.

Speaking at the event, Actor Jiiva said, “Today we’re unveiling what we’ve been working on for the last one year- ‘Deaf Frogs’ music label. The company is also built to produce songs and short films for independent artists. We’ve introduced more than 40 new directors through our parent company Super Good Films. We are proud to introduce independent artistes through Deaf Frogs as well. Based on a short story told by ‘Superstar’ Rajinikanth, ‘We have to keep doing our work without listening to anyone and progressing’ we came up with the name. Today we’re announcing what we’ve got going on for the music label company, which was created to produce songs and short films for independent artists. We take pride in introducing independent artists through this company, just as we have introduced more than 40 emerging directors through our parent company, Super Good Films. Based on the short story told by ‘Superstar’ Rajinikanth, ‘We should keep doing our work without listening to anyone and progressing’, the company has been named as ‘Deep Frogs’. This institution will be an art gallery,” he said, welcoming everyone.

*Santhosh Narayanan*
Later, when music director Santhosh Narayanan released the song ‘Puriya Vai’ by Killa.K’s independent artist, he said that his biggest independent song was ‘Enjoy Enjami’ and he is also planning to start a music label company. “I am happy that people like Jiiva are entering the field. If there are people like him with business acumen and artistic passion, the sky is the limit for independent artists. There are more than 6 lakh independent singers in Tamil Nadu and wished that this music label company would be a platform for them.

 

*Vishnu Vishal*
Vishnu Vishal, who released the short film ‘Panimel Vizhum Kanal Kaatru’, said that when he started his film career, he was looking for opportunities. It was only two days ago when he completed 15 years in the film industry, and he has been friends with Jiiva for 13 years. Speaking about Deaf Frogs he said, “Giving opportunities to new talent is in his blood and his father has given opportunities to many such artists.” He later said that his production company also wants to work with the company and expressed his congratulations.

*Karthi*
When actor Karthi released the independent song ‘The’ Pop, he said, “Our Tamil girls called ‘The’ Pop will sing, dance and compose the music themselves. After that I will introduce anyone who is looking for such an opportunity to Jiiva who is like a schoolmate. Like his father, Jiiva has a mind to give opportunities to newcomers.” He recalled that he and director Aamir received the Cyprus International Film Award on behalf of Jiiva for the film ‘Ram’.
Speaking at the event, Jiiva used this platform to thank him for receiving the award. He also said that he would like to thank his parents for encouraging the interest of independent artists.

*Jayam Ravi*
Actor Jayam Ravi released independent singer Kenisha’s song ‘Ithai Yaar Solvaro’. “There are more supporters of independent artists than us on social media. It is a great gift for such independent artists to have a mentor like Jiiva. He will be there for you like his father was a mentor to him. He is my long time friend. During the shooting of his first film, both of us participated in the shooting in a set set like a train. Arya, Jiiva and I are the best of friends and can rightfully claim that he has become a family friend to me. He sincerely wished well for Deaf Frogs to continue to grow.

*Ishari K.Ganesh*
Speaking on the release of the documentary film ‘Folk Agenda’, Producer Ishari K. Ganesh got angry with actor Jiiva. He said that he was never informed about starting the company and that he is ready to travel along with this company, congratulating and wishing the company all success. In response to this, Jiiva said, “Vels International is one of the notable big production houses in the Tamil film industry. Ishari K. Ganesh is also creating great works, introducing new talents like Pradeep Ranganathan. I hope he continues to do the same.”

*Vijay Antony*
Music Director and actor Vijay Antony said that the people who worked on his independent song ‘Ovvoru Pennukkum’ released by him, have shown their talent and that he is a ‘deaf frog’ and regardless of anyone’s talk, he has come to the next stage as a composer, actor and director. “If we have faith in us, we can achieve anything. Kudos to Jiiva for such a good effort and wish this company reaches greater heights.”

*Mirchi Shiva*
Actor Mirchi Shiva who released the short film ‘Ek Ladka Ek Ladki’ said, “Talent can never be hidden and will come out one day. We should not give importance to the negative comments on social media, we should believe in our talent and keep improving. Sending my best wishes yo ‘Deaf Frogs’ for a huge success at the level.”

*Kalaiyarasan & Aadhav Kannadasan*
Actors Kalaiyarasan and Aadhav Kannadasan congratulated the film’s crew while releasing the preview of the web series ‘Funtastic’ starring Eniyan. Kalaiyarasan said that he was happy to have worked with Jiiva in the film Pesum Pozhudhu Mugamoodi and that he treated him as a good friend.