Monday, March 20
Shadow

லயோலா கல்லூரியின் புற சேவை துறை நடத்தும் மாற்றுத் திறனாளிகளின் கொண்டாட்டம்

 


மாற்றுத்திறனாளிகளோடு செயல்படுவது உணர்ச்சி பூர்வமான செயல்பாடு அல்ல, மாறாக அறிவார்ந்த செயல்பாடு என்பதையே உணர்த்தும் நிகழ்ச்சி. இந்த திறனாளிகளின் கொண்டாட்டம் சமூகத்தில் மாற்றுத்திறன் தோழமைகள் மற்றும் மாற்றுத்திறன் அல்லாதவர்கள் இணைந்தது தான் இந்த சமூகம் மேலும் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கியது தான் இந்த சமூகம் என்பதை உணர்த்தும் அளவில் திறனாளிகளின் கொண்டாட்டம் அமைந்தது லயோலா கல்லூரியின் இரண்டாம் ஆண்டு படிக்கும் அத்தனை மாணவர்களும் இச்சமூகத்தில் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் சந்திக்க வேண்டும். தங்களால் முடிந்த செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்பதுதான் புறசேவை துறையின் அடிப்படை செயல்பாடு அதனை கற்றுக் கொடுப்பதற்கு பேராசிரியர்களும் மாணவர்களை களத்தில் கொண்டு சேர்ப்பது களத்தில் பாடம் கற்பிப்பது போன்றவையே இத்துறையின் அடிப்படை நோக்கம்.

மாணவர்களில் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்துவது தான் இத்துறையின் முக்கிய நோக்கம்

அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளை மாணவர்கள் கல்லூரிக்கு கூட்டி வருவதும் அவர்களுக்கு விளையாட்டுகளை பங்கேற்க வைப்பதும் பங்கேற்ற அத்தனை பேருக்கும் பரிசுகளையும் வழங்கி அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்வதும் மாற்றுத் திறனாளிகள் கூண்டுக்குள்ளையே இல்லாமல் வெளி சமூகத்தில் நாமும் பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு வரவும் இந்நிகழ்ச்சியின் வாய்ப்பா இருந்தது அனைவருக்கும் வாய்ப்பாய் இருந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் தேவை எனில் உடனடியாக அரசாங்கத்தை அணுகுவது இயல்பு அதனை மாணவர்கள் செய்ய முனைப்பதும் அதற்கு முத்தாய்ப்பாய் உதவி செய்வேன் என திரு குமார் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் மாவட்ட அலுவலர் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராய் அழைக்கப்பட்டிருந்தார் அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களால் இயன்ற அத்தனையும் செய்து தரும் நான் தயாராய் இருக்கிறேன் என்பதையும் பதிவு செய்தார்.

மேலும் திரு சில்மிஷம் சிவா அவர்கள் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாய் இருந்தவர் இந்த திறனாளிகளின் கொண்டாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராய் வருகை தந்து மாற்றுத்திறனாளிகளை ஆரவாரம் செய்தார் மாற்றுத்திறனாளிகளோடு இதயபூர்வமான பங்களிப்பையும் செய்தார்.

திரு எஸ். பால பாலபாரதி எழுத்தாளர் அவர்களும் இந்நிகழ்ச்சிக்கு வந்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கத்தை தந்தார் இச்சமூக பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்

மேலும் லயோலா கல்லூரியின் செயலர் தந்தை, அருட்தந்தை ஏ லூயிஸ் ஆரோக்கியராஜ் மற்றும் துணை முதல்வர் திரு சார்லஸ் அவர்களும் இந் நிகழ்ச்சிக்கு வருகை தந்து தங்கள் ஆதரவை தந்தனர் பேராசிரியர் ரத்னா அவர்களின் வழிகாட்டுதலில் மாற்றுத்திறன் மாணவர்கள் சிறப்பாய் இந்த திறனாளிகளின் கொண்டாட்டத்தை அரங்கேற்றி முடித்தார்கள்

லயோலா கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தியது தான் இந்த திறனாளிகளின் கொண்டாட்டம் மாற்றுத்திறன் மாணவர்களே உணவு இடம் பரிசு பொருள்கள் சிறப்பு அழைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்தையும் தங்களது நண்பர்களோடு சேர்ந்து நிகழ்த்தி இருக்கிறது தான் இந் நிகழ்வின் குறிப்பிடத்தக்கவை

மாற்றுத்திறன் மாணவர்களோடு சேர்ந்து மாற்றுத்திறன் அல்லாத மாணவர்கள் களத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளை கல்லூரிக்கு அழைத்து வந்து சிறு விளையாட்டுகளின் மூலமாக நாங்களும் இருக்கிறோம் என்பதை உறுதி செய்யும் அளவிலும் வீட்டில் இருப்பதை தாண்டி நாமும் திறனாளிகளாய் ஆக முடியும் என்பதை உணர செய்வதும் செய்வதுமாய் அமைந்தது இந்த திறனாளிகளின் கொண்டாட்டம் சிறப்பாய் நிறைவு பெற்றது அனைவரும் ஒத்துழைப்போடும்.
பேராசிரியர்.திருமதி ரதனா அவர்களுடன் லயோலா ஆர்.சி.டி.ஏ மாணவர்கள் வழிநடத்தினர்.