பிரமிக்க வைக்கும் விளம்பரங்களால் தெலுங்கு ரசிகர்களை வியப்படைய செய்த ரெமோ திரைப்படம், இன்று அவர்களின் அமோக வரவேற்புடன் வெளியானது.
“இன்று தெலுங்கில் வெளியான எங்களின் ரெமோ திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட பாராட்டுகளை பெற்று வருகிறது…தெலுங்கு வர்த்தக உலகில் நிலையான ஒரு வெற்றியை எங்களின் ரெமோ தழுவி இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லுவேன். முதல் முறையாக ரெமோ திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு, தெலுங்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவையும், வரவேற்பையும் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது. வர்த்தக ரீதியாகவும் சரி, விளம்பர ரீதியாகவும் சரி….எங்களின் ‘ரெமோ’ தெலுங்கு திரையுலகை ஈர்த்த ஒரு ரோமியோ….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் தயாரிப்பாளரும், 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனருமான் டி ராஜா.