Wednesday, November 11
Shadow

பெண்கள் கல்லூரிக்குள் ஒரே ஒரு இளைஞன்… அங்கே நடக்கும் கலாட்டா என்ன? – ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘ஹைக்கூ’ டிரெய்லர்!

பெண்கள் கல்லூரிக்குள் ஒரே ஒரு இளைஞன்… அங்கே நடக்கும் கலாட்டா என்ன? – ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘ஹைக்கூ’ டிரெய்லர்!

காதல், காமெடி, கல்லூரி கலாட்டா என இளமைத் துள்ளலுடன் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ டிரெய்லர் – அக்டோபர் 23 முதல் திரையரங்குகளில்!

காதலையும் நகைச்சுவையையும் இளமைத் துள்ளலுடன் கலந்து, அதேநேரத்தில் பெண்களைப் பற்றிய பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கருத்தையும் இயல்பாகப் பேசும் புதிய திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ஹைக்கூ’. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

145 விநாடிகள் நீளும் டிரெய்லர், படத்தின் கதைக்களத்தை சுவாரஸ்யமான கோணத்தில் அறிமுகப்படுத்துகிறது. பெண்கள் மட்டுமே பயிலும் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மாணவனாக மனோ நுழையும் சூழலில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள், கலாட்டாக்கள் மற்றும் உறவுகளின் வழியாக கதை நகர்கிறது. கல்லூரி பின்னணியில் உருவாகும் நகைச்சுவைச் சம்பவங்களுடன், காதல் மற்றும் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளையும் டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.

கதையின் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு இணையாக, ஆண்களின் பார்வையில் பெண்களை அணுகும் விதம் மற்றும் பெண்களின் தனிப்பட்ட விருப்பங்களையும் உணர்வுகளையும் மதிப்பதன் அவசியம் குறித்தும் திரைப்படம் பேசுகிறது. ஆனால், எந்தவொரு கருத்தையும் நேரடியாகப் போதிக்கும் வகையில் அல்லாமல், கதையின் போக்கிலேயே அதை இயல்பாகச் சொல்லும் விதத்தில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘கோர்ட்: ஸ்டேட் Vs நோபடி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஸ்ரீதேவி, தனது இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். அதேபோல் ஃபெமினா ஜார்ஜ், தனது திரை இருப்பு மற்றும் நடிப்பால் படத்திற்கு கூடுதல் ஈர்ப்பைச் சேர்த்துள்ளார். ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோருக்கிடையேயான கெமிஸ்ட்ரியும் டிரெய்லரில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

‘ஹைக்கூ’ திரைப்படம் குறித்து நடிகர் ஏகன் கூறுகையில், “இது ஒரு ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம். அதேநேரத்தில், இதற்குள் ஒரு ஆழமான கருத்தும் இருக்கிறது. பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை எப்படி மாற வேண்டும், பெண்களை மதிப்பதன் முக்கியத்துவம் என்ன என்பதையும் படம் இயல்பாகச் சொல்கிறது. ஆனால், எந்தக் கருத்தையும் போதிக்கும் திரைப்படமாக இது இருக்காது. கதைக்குள் கருத்தை இயல்பாக இணைத்து, அனைவரும் ரசிக்கும் பொழுதுபோக்கு படமாக உருவாக்கியிருக்கிறோம். திரையரங்கைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் மனதில் இந்தப் படம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோருடன் அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், சக்தி பிரணீஷ்.பி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை பிரேம் கருந்தமலை கவனித்துள்ளார்.

இளமை, காதல், நகைச்சுவை என ரசிகர்களை மகிழ்விக்கும் அம்சங்களுடன், பெண்களை மதிப்பது குறித்த ஒரு நுட்பமான பார்வையையும் முன்வைக்கும் ‘ஹைக்கூ’, டிரெய்லர் மூலம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பி. சக்திவேலன் வெளியிடுகிறார்.

‘ஹைக்கூ’ – காதலும் கலாட்டாவும் கலந்த இந்த இளமைப் பயணம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி முதல் திரையரங்குகளில்!

 

Love, Laughter and College Chaos: ‘Haiku’ Trailer Promises a Feel-Good Romantic Comedy

Featuring Aegan, Sridevi and Femina George in the lead roles, the film directed by Yuvaraj Chinnasamy is set to hit theatres worldwide on October 23

Feel-good romantic comedies have always found a special place among movie lovers, especially when they blend relatable emotions, youthful energy and humour. Adding to this list is ‘Haiku’, an upcoming romantic comedy that promises a refreshing mix of love, laughter, college fun and emotions.

Written and directed by Yuvaraj Chinnasamy, the film stars Aegan, Sridevi and Femina George in the lead roles. Produced by Dr. T. Arulananthu and Mathew Arulananthu under the banner of Vision Cinema House, ‘Haiku’ is gearing up for a worldwide theatrical release on October 23.

The recently released 145-second trailer introduces audiences to the film’s vibrant world, filled with colourful visuals, college moments, romance and plenty of humour. The story revolves around Mano, the only male student in an all-girls college, and the unexpected situations and hilarious incidents that unfold around him.

The trailer also offers a glimpse into the chemistry between the lead characters, along with entertaining sequences and emotionally engaging moments. While the film promises to be a light-hearted entertainer, it also carries a meaningful underlying message about respecting women, their choices and their individual emotions.

Speaking about ‘Haiku’, actor Aegan said that the film is a feel-good romantic comedy with a deeper thought at its core. According to him, the movie explores how men’s perspectives towards women need to evolve and highlights the importance of respecting women. However, he emphasised that the message has not been presented in a preachy manner, but has instead been naturally woven into the storyline.

Aegan further expressed confidence that the film would leave an impact on audiences even after they walk out of the theatre, while still offering an enjoyable and entertaining cinematic experience.

Sridevi, who caught attention with her performance in Court: State Vs Nobody, is expected to impress audiences once again with her natural performance and screen presence. Femina George adds further charm to the film with her captivating presence and performance. The energy and chemistry between Aegan, Sridevi and Femina George have already generated interest following the release of the trailer.

The film also features Adhirchi Arun, Subramaniam Sethu, Adhiyamaan, Mime Gopi and Indhumathi Manikandan in important roles.

Siddu Kumar has composed the music for the film, while Hariharan Ram has contributed additional screenplay work. Priyesh Gurusamy is handling the cinematography, with Sakthi Praneesh P taking care of the editing. The art direction is by Prem Karundhamalai.

‘Haiku’ will be released across Tamil Nadu by P. Sakthivelan under the banner of Sakthi Film Factory.

With its combination of youthful romance, college comedy, colourful visuals and an emotionally relevant message, ‘Haiku’ is gearing up to offer audiences a refreshing feel-good entertainer.

‘Haiku’ hits theatres worldwide on October 23.