
M.S.DHONI UNTOLD STORY திரைப்படத்தை விளம்பரப்படுத்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னைக்கு இன்று வந்திருந்தார்.அவர் மேடையில் பேசியதாவது…
தமிழ்நாடு எனக்கு பிடித்தமாநிலம் அதனால் தான் சென்னை அணிக்கு தலைமை ஏற்றுக்கொண்டேன்.
இந்தியாவில் பல இடங்களில் உணவுகளை சாப்பிட்டது உண்டு ஆனால் சென்னை பிரியாணி போல சுவையான பிரியாணி எந்த மாநிலத்திலும் சாப்பிட்டது கிடையாது
தமிழக பெண்கள் உடை அணியும் விதம் அவர்களிடம் எனக்கு மரியாதையை உருவாக்கியுள்ளது.
சூரியாவின் மகள் தோனியிடம் , நீங்கள் வீடு,பள்ளி,மைதானம் எங்க சந்தோமாக இருப்பீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு தோனியின் பதில்.
விளையாட்டு மைதானம் எனக்கு இரண்டாவது பள்ளி
பள்ளி எனக்கு இரண்டாவது வீடு
வீடு எனக்கு இரண்டாவது மைதானம்.
நான் உங்கள் அப்பா சூர்யாவுடைய ரசிகன்
சூர்யா நடித்த ” சிங்கம் ” படத்தை நான் ஹிந்தியில் பார்த்து வியந்துபோனேன்.என்ன ஒரு கம்பீரம்…
பள்ளி பருவத்தில் தாங்கள் குறும்புத்தனம் செய்வீர்களா என்று கேட்ட கேள்விக்கு, தோனி அவர்களின் பதில்’
நான் பள்ளி பருவத்தில் மிகவும் விளையாட்டுத்தனமாகத்தான் இருப்பேன், இந்த வயதில் இப்படிதான் இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் சூர்யாவின் மகனான தேவ் நானும் மிக குறும்புதனமான விளையாட்டு பையன் என்று பதிலலித்தார்…
பின்பு தோனி உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று ரசிகர்கள் கேட்டவுடன்,
உடனே தோனி தோரனையுடன் எழுந்து நின்று சட்டையை கோதிய படி நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் அவர் வழியை பின்பற்றுபவன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலில் என் வழி ,.தனி வழி என்று அவர் கூறவும் ரசிகர்கள் ஆர்பரித்தனர்.. கலை நிகழ்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.