
அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே நிறைவு பெற்ற ‘மாகாளி’ முதல் கட்டப் படப்பிடிப்பு!
மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘மாகாளி’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
படத்தின் அறிவிப்பு வெளியான குறுகிய காலத்திலேயே படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, திட்டமிட்டதைவிட முன்னதாகவே முதல் கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த், இப்படத்தை எழுதி இயக்குகிறார். சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், மனிதர்களின் உறவுகள், உணர்வுகள் மற்றும் அவர்களுக்குள் உருவாகும் போராட்டங்களை அழுத்தமான திரைக்கதையின் வழியாகப் பதிவு செய்யும் என படக்குழு தெரிவித்துள்ளது.
வேலூர் மற்றும் இராணிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற முதல் கட்டப் படப்பிடிப்பில், படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு திட்டமிட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே நிறைவடைந்திருப்பது படக்குழுவின் பணியில் இருக்கும் வேகத்தை வெளிப்படுத்துகிறது.
அண்மையில் வெளியான ‘மாகாளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்ற நிலையில், தற்போது முதல் கட்டப் படப்பிடிப்பும் நிறைவடைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் அமீருடன் ஸ்வாசிகா, அனிஷ்மா, ஹரிஹரன், அஸ்வின் ராம், லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்திற்கு பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா RK படத்தொகுப்பை கவனிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும் மேற்கொள்கின்றனர்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
முதல் கட்டப் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ள ‘மாகாளி’ படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை தற்போது வேகமாக மேற்கொண்டு வருகிறது. அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே படப்பிடிப்பில் காட்டப்பட்டுள்ள இந்த வேகம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

‘Maagali’ Wraps Up Its First Schedule of Shooting Within Days of Announcement!
The first schedule of shooting for ‘Maagali’, presented by filmmaker Mari Selvaraj and starring actor Ameer in the lead, has been successfully completed.
The film began shooting just a few days after its official announcement and has completed its first schedule ahead of the planned timeline. The team has now intensified preparations for the next schedule.
Presented by Mari Selvaraj and written and directed by his former associate director S.P. Aravind, ‘Maagali’ is said to be a socially relevant film that explores an important issue prevailing in society. The film also delves into human relationships, emotions and the conflicts that arise within them.
The first schedule was filmed across Vellore and Ranippettai, with the team successfully completing the planned portions ahead of schedule. The film’s recently released First Look poster has already garnered attention from audiences and heightened curiosity about its storyline.
Alongside Ameer, the film features Swashika, Anishma, Hariharan, Ashwin Ram and Lenin Bharathi in important roles.
The technical crew includes Pradeepan Selvarathinam as cinematographer, Selva RK as editor and Justin Prabhakaran as music composer. Ramu Thangaraj is handling the art direction, while Dilip Subbarayan choreographs the action sequences.
‘Maagali’ is jointly produced by K. Karunamoorthy of Ayngaran International, Divya Mari Selvaraj of Navvi Studios and Mari Selvaraj.
With the first schedule now successfully wrapped, the team has moved swiftly into preparations for the next phase of production. With its rapid progress right from the announcement, ‘Maagali’ is steadily building anticipation among film audiences.
