மாளிகைப்புரம் திரைவிமர்சனம்
எத்தனையோ சாமி படங்கள் வந்துள்ளது. அதிலும் குறிப்பாக எத்தனையோ அய்யப்பன் படங்கள் வந்து இருக்கு ஆனால் இந்த படம் மிக சிறந்த படம் என்று சொன்னால் மிகையாகாது காட்சிக்கு காட்சி நம்மை நெகிழ வைக்கிறார் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர்.இது பக்தி படம் மட்டும் இல்லை அதோடு அழகான குடும்ப செண்டிமெண்ட் உள்ள படம்
ஒரு நடுத்தர குடும்பத்து 8 வயது பெண் சபரிமலை போகவேண்டும் என்று ஆசை படுகிறாள் ஆனால் அந்த பெண்ணுக்கு பல ரூபங்களில் பிரச்சனை ஏற்படுகிறது அதையும் மீறி அந்த பெண் சபரிமலைக்கு போக ஆசை படுகிறாள். இது நடந்ததா என்பது தான் படத்தின் கரு.
நடுத்தர குடும்ப பெண் கள்ளு என்கிற கண்மணி இவளுக்கு சபரிமலை போக வேண்டும் என்பது மிக பெரிய ஆசை ஆனால் அவரின் அப்பாவுக்கு வசதி இல்லை அவர் ஒவ்வொரு முறையும் தட்டி செல்கிறது அப்போது அந்த ஊரில் ஒரு வயதானவர் கள்ளுவை இந்த வருசம் நீ சபரிமலை கூட்டிட்டு போ அவளுக்கு 8 வயது ஆகவே நீ கண்டிப்பாக கூட்டிட்டு போக வேண்டும் என்கிறார். இல்லை என்றால் விபரீதம் ஏற்படும் என்று சொல்ல அவரும் சபரி மலைக்கு அழைத்து செல்ல முடிவு செய்கிறார். ஆனால் அவர் கடன் வாங்கியவர் கடனை கொடு என்று கேட்கும் போது இவர் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்க அந்த ஆள் ஊர் மக்கள் முன் இவரை அடிக்கிறார். இதை மகளும் பார்துவிடுகிரால் இதனால் மனம் உடைந்து போகும் இவர் தற்கொலை செய்துகொள்கிறார். இதையடுத்து அவரின் பாட்டி உன் அப்பா அய்யப்பணிடம் சென்று விட்டார் என்று சொல்ல உடனே அந்த பெண் பக்கத்து வீட்டு சின்ன பயனையும் அழைத்து கொண்டு சபரி மலை போகிறாள் அங்க ஒரு மனித மிருகம் இவளை வேட்டையாட நினைக்கிறான் இதை அறிந்த அந்த சிறுவன் கள்ளு வா எனக்கு பயமா இருக்கு வீட்டுக்கு போகலாம் என்கிறான் ஆனால் கள்ளு முடியாது நான் மலைக்கு சென்று அய்யப்பனை தரிசித்து என் அப்பாவை நல்லா பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி ஆகனும் என்று சொல்லுகிறாள். அந்த மனித மிருகத்தை மீறி எப்படி மலைக்கு போகிறாள் என்பது மீதி கதை.
கள்ளுவாக நடித்து இருக்கும் குழந்தை நம்மை மெய்மறக்க வைக்கிறார் அவர் நடிப்பிலும் சிரிப்பிலும் எத்தனையோ குழந்தை நட்ச்சதிரம் நாம் பார்த்து இருக்கிறோம் ஆனால் இவள் தெய்வ குழந்தை அப்படி ஒரு நடிப்பு அப்படி ஒரு வசீகரம் அந்த பிஞ்சு குழந்தையிடம் நிச்சயம் தேசியவிருது இந்த குழந்தைக்கு உண்டு.
நாயகன் உண்ணி முகுந்தன் தமிழில் தனுஷ் நடித்த சீடன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் மிக முக்கிய பங்கு இவருக்கு இவரின் கதாபாத்திரம் நம்மை சுண்டி இழுக்கும் அளவுக்கு செய்துள்ளார் அய்யப்பனை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறார். இதற்கு காரணம் இவரின் நடிப்பு என்று தான் சொல்லணும்.
படத்தின் முக்கிய பலம் படத்தின் இயக்குனர் இவர் சூரியா நடித்த பேரழகன் படத்தின் இயக்குனர் சசி ஷங்கர் மகன் விஷ்ணு சசி ஷங்கர் இயக்கியுள்ளார். தன் முதல் படத்திலேயே தான் சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார்.
படத்தின் மிக முக்கிய பலம் ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் ரஞ்சித் ராஜ் இசையில் நம்மை உருகவைத்துள்ளார் பாடல்களும் சரி பின்னணி இசையிலும் சரி நம்மை மெய்மறக்க வைத்துள்ளார். ஒளிப்பதிவாளர்
விஷ்ணு நாராயணன் அற்புதமான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.
படத்தின் மலையாள கதையசிரியர் அபிலாஷ் பிள்ளை பக்தி படம் மட்டும் இல்லாமல் அருமையான குடும்பகதையும் சேர்த்து கொடுத்துள்ளார் அதை தமிழாக்கம் செய்த பிரபாகர் சிதைக்காமல் மொழி மாற்றம் செய்துள்ளார்.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் உணர்ந்து நடித்து இருப்பது படத்துக்கு பலம்.
மொத்தத்தில் மாளிகைப்புரம் படம் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்