
பிப்ரவரி 13 அன்று காதலர் தின சிறப்பு – மாதவனின் ‘மின்னலே’ மீண்டும் திரைக்கு!
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியீடு
சி டிவி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மாதவன் மற்றும் ரீமா சென் நடிப்பில் உருவான காதல் திரைப்படமான ‘மின்னலே’, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கிளாசிக் திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் புதிய போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், மாதவன் – கௌதம் வாசுதேவ் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் வெற்றிக் கூட்டணியில் உருவான ‘மின்னலே’ திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார்.
‘மின்னலே’ திரைப்படம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம் இதுவாகும். மேலும், ‘அலைபாயுதே’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் மாதவன் நடித்த முக்கியமான காதல் திரைப்படமாகவும் இது திகழ்கிறது. இப்படத்தில் அப்பாஸ், ரீமா சென், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2001ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியது குறிப்பிடத்தக்கது.
காலத்தை கடந்த காதல் கதையாக ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும் ‘மின்னலே’, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Madhavan’s ‘Minnale’ to Re-release on February 13 as a Valentine’s Day Special
Released by Producer Rahul of Romeo Pictures
The romantic film ‘Minnale’, starring Madhavan and Reema Sen, directed by Gautham Vasudev Menon and produced by Dr. Murali Manohar under the banner of C TV Entertainment Limited, is set to re-release in theatres after 25 years.
In recent years, re-releasing classic films that received immense love from audiences has become a growing trend. Following this trend, ‘Minnale’, created by the successful combination of Madhavan, Gautham Vasudev Menon, and music composer Harris Jayaraj, will be re-released across Tamil Nadu on February 13, marking Valentine’s Day. The film will be distributed by producer Rahul under the banner of Romeo Pictures.
‘Minnale’ holds several special milestones. It marked the directorial debut of Gautham Vasudev Menon. It was also one of Madhavan’s notable romantic films following the massive success of Alaipayuthey. The film features Abbas, Reema Sen, and Vivek in key roles.
Originally released in February 2001, the film received tremendous appreciation from audiences, and all the songs composed by Harris Jayaraj became chartbusters.
Considered a timeless romantic classic, the re-release of ‘Minnale’ after 25 years has created great excitement and anticipation among fans.
