Saturday, January 17
Shadow

‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு தளத்தில் மம்மூட்டியின் வருகை – ரசிகர்களிடையே வைரலாகும் தருணங்கள்

‘ஐ அம் கேம்’ படப்பிடிப்பு தளத்தில் மம்மூட்டியின் வருகை – ரசிகர்களிடையே வைரலாகும் தருணங்கள்

மலையாள சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவாகி வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், மெகாஸ்டார் மம்மூட்டி நேரில் தோன்றிய நிகழ்வு தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

படப்பிடிப்பு நடைபெற்று வரும் லொகேஷனுக்கு வந்த மம்மூட்டி, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், ஆக்ஷன் இயக்குநர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட படக்குழுவினருடன் கலந்துரையாடி, அவர்களின் பணிகளை பாராட்டி உற்சாகப்படுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் மம்மூட்டி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, குறுகிய நேரத்திலேயே வைரலாகி வருகின்றன.

‘RDX’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த படைப்பாக உருவாகும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தை, துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films நிறுவனத்தின் சார்பில் பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர். சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து ஆகியோர் கதையை எழுதியுள்ள இந்தப் படத்திற்கு, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹபாஸ் ரசீத் வசனங்கள் எழுதியுள்ளனர்.

இதற்கு முன்பு வெளியான துல்கர் சல்மானின் ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பலமடங்கு உயர்த்தியது. முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

துல்கர் சல்மானின் 40-வது திரைப்படமாக அமைந்துள்ள ‘ஐ அம் கேம்’ படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிக்பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை, ‘கபாலி’, ‘KGF’, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘சலார்’ போன்ற பான்-இந்தியா படங்களில் பணியாற்றிய அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைக்கின்றனர். ‘RDX’க்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத்துடன் அன்பறிவ் குழு மீண்டும் இணையும் படமாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

தொழில்நுட்பக் குழு: லைன் புரொட்யூசர் – பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலி
இசை – ஜேக்ஸ் பெஜாய்
படத்தொகுப்பு – சமன் சாக்கோ
தயாரிப்பு வடிவமைப்பு – அஜயன் சல்லிசேரி
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
ஆடை – மாஷர் ஹம்சா
புரொடக்ஷன் கன்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன்
இணை இயக்குநர்கள் – ரோஹித் சந்திரசேகர்
பாடல் வரிகள் – மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்
VFX – தௌஃபீக் (Eggwhite)
போஸ்டர் டிசைன் – டென் பாயிண்ட்
சவுண்ட் டிசைன் – சிங் சினிமா
சவுண்ட் மிக்ஸிங் – கண்ணன் கணபதி
ஸ்டில்ஸ் – எஸ்.பி.கே
மார்க்கெட்டிங் ஹெட் – விஜித் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

மொத்தத்தில், மம்மூட்டியின் வருகை மூலம் ‘ஐ அம் கேம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உச்சத்தை எட்டியுள்ளது.

Mammootty Visits the Shooting Spot of Dulquer Salmaan’s “I Am Game”

Megastar Mammootty paid a surprise visit to the shooting spot of actor Dulquer Salmaan’s upcoming film “I Am Game”, creating a moment that has now drawn widespread attention among fans.

Mammootty, who arrived at the location where filming is currently in progress, interacted with director Nahas Hidayath, action choreographers Anbariv Masters, and actors Mysskin, Kayadu Lohar, Samyuktha Viswanathan, among others. He encouraged the team and appreciated their work. Pictures taken by Mammootty at the shooting spot have surfaced on social media and are rapidly going viral.

Following the blockbuster success of RDX, this film marks director Nahas Hidayath’s next venture. “I Am Game” is being produced on a grand scale by Dulquer Salmaan and Jom Varghese under the banner of Wayfarer Films. The story is written by Sajir Baba, Ismail Abubacker, and Bilal Moidu, while the dialogues are penned by Adarsh Sukumaran and Shahabas Rasheed.

Earlier, the first-look poster showcasing Dulquer Salmaan in a stylish and mass avatar received an overwhelming response from fans, significantly raising expectations for the film. Posters of the main characters have also already been released.

One of the most anticipated films in Malayalam cinema, “I Am Game” is also noteworthy as Dulquer Salmaan’s 40th film. The cast includes Antony Varghese, Tamil actor-director Mysskin, Kayadu Lohar, Kathir, Parth Tiwari, and Tamil actress Samyuktha Viswanathan in key roles.

This big-budget action thriller features stunt choreography by Anbariv Masters, who have previously worked on pan-India films such as Kabali, the KGF series, Kaithi, Vikram, Leo, and Salaar. The film also marks the reunion of director Nahas Hidayath and Anbariv Masters after RDX.

Technical Crew: Line Producer – Bipin Perumbilly
Cinematography – Jimshi Khalid
Music – Jakes Bejoy
Editing – Saman Chacko
Production Designer – Ajayan Chalissery
Makeup – Ronex Xavier
Costumes – Mashar Hamsa
Production Controller – Deepak Parameswaran
Associate Directors – Rohith Chandrasekhar
Lyrics – Manu Manjith, Vinayak Sasikumar
VFX – Taufeeq (Eggwhite)
Poster Design – Ten Points
Sound Design – Sync Cinema
Sound Mixing – Kannan Ganapathy
Stills – S.P.K
Marketing Head – Vijith Viswanathan
Public Relations – Yuvaraj

Overall, Mammootty’s visit has further amplified the buzz and anticipation surrounding “I Am Game”.